Lead NewsLocal

அர்ஜூன ரணதுங்கவைத் தாக்க மஹிந்தவின் ஆதரவாளர்கள் முயற்சி! பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டதில் ஒருவர் பலி; இருவர் படுகாயம்!! – கொழும்பில் பதற்றம்

கொழும்பு – தெமட்டகொடவில் பெற்றோலியக் கூட்டுத்தாபனப் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினரான அர்ஜூன ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு இன்று மாலை வந்த, முன்னாள் பெற்றோலிய வளங்கள் அமைச்சரான அர்ஜூன ரணதுங்கவுக்கு, மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, அவரைத் தடுத்து வைத்தனர். இதனால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது.

இதன்போது, அர்ஜூன ரணதுங்க மீது தாக்குதல் நடத்த முற்பட்டவர்கள் மீது, அவரது பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தையடுத்து அர்ஜூன ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, தற்போது குறித்த பிரதேசத்தில் கலகம் அடக்கும் பொலிஸார், பொலிஸ் விசேட படையணி என்பன இணைந்து பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading