Sports

ஆசியக் கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம்! வங்கப் பாம்புகளுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?

 

ஆசியாவின் கிரிக்கெட் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கப்போகும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE)  இன்று  (15) ஆரம்பமாகின்றது.

 

முதல் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று களம்காண்கின்றன. இலங்கை நேரப்படி மாலை 5 மணிக்கு போட்டி ஆரம்பமாகின்றது.

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் 1983 ஆம் ஆண்டு சார்ஜாவில் ஆரம்பமாகியது.முதலாவது தொடரில் சாம்பியனான பெருமை சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணிக்கு உள்ளது.

அன்று முதல் இதுவரை நடைபெற்ற 13 தொடர்களில் இந்தியா 6 தடவைகளும் இலங்கை 5 தடவைகளும் பாகிஸ்தான் 2 தடவைகளும் சாம்பியனாகியுள்ளன.

இந்த முறை தொடரில் இலங்கை நடப்பு சாம்பியனாக களமிறங்குகின்றது.

இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகள் A குழுவிலும், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகள் B குழுவிலும் போட்டியிடுகின்றன.

இலங்கை, பங்களாதேஷ் ஆகிய அணிகள் அண்மைக்காலமாக கடும் சமரில் ஈடுபட்டுவருகின்றன. ஒரு போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தப் பின்னர், பங்களாதேஷ் அணி வீரர்கள் ‘பாம்பு நடனம்’ ஆடிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விடியோவானது இணையத்தளங்களிலும் வைரலாகியது.

கிரிக்கெட் உலகிலும் பாம்பு டான்ஸ் ஹிட்டானது. எனவே, பாம்புடான்ஸ் ஆடி தம்மை கலாய்த்த பங்களாதேஷ் அணிக்கு இலங்கை அணி இன்று பதிலடி கொடுக்குமா?

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading