World

இந்தோனேசியாவில் சுனாமி! 48 பேர் பலி – பலர் மாயம்!!

இந்தோனேசியாவில் சுற்றுலா ஸ்தலமான சுலவேசி தீவில் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியதில் ராட்ச அலைகளில் இழுத்துச் செல்லப்பட்டு 48 பேர் உயிரிழந்தனர்.

இந்தோனேசியாவின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் டோங்காலா நகரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

முதலில் 6.1 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் பதிவானது. இதைத் தொடர்ந்து. மத்திய பகுதியில் பாலு நகரில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இருநகரங்களிலும் சுமார் 6 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர்.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், பின்னர் அது திரும்ப பெறப்பட்டது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால், சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்ட சிறிது நேரத்தில் கடலோரப்பகுதிகளில் பெரும் சுனாமி தாக்கியது. 2 மீட்டர் உயரத்திற்கு ஆர்ப்பரித்து எழுந்த அலைகள் கரையை நோக்கி பாய்ந்து வந்து தாக்கின.

இதில் கடலோர பகுதிகளில் உள்ள வீடுகள்,  கட்டடங்கள் சேதமடைந்தன. பலர் சுனாமி ராட்ச அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 30 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் காணாமல் போயுள்ள நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading