Jobs

அறிமுகமற்றவர்களாக இணைகின்றவர்கள், இறுதியில் நண்பர்களாக மாறுகின்றனர் – SLIIT ல் நட்பின் வரலாறு மகத்துவமானது  

 “புரோ” என்ற வார்த்தையை SLIIT ல் உங்களால் அடிக்கடி செவிமடுக்க முடியும். கற்கும் மண்டபங்கள், மின்தூக்கிகள், சிற்றுண்டிச்சாலைகள், ஏன் நடைக்கூடங்களில் கூட இந்த வாக்கியம் எதிரொலிக்கின்றது. ஒப்படைப் பணி குறித்து கலந்துரையாடுவது, மனதிலுள்ள விரக்திகளைக் கொட்டித் தீர்ப்பது, சமீபத்தைய திரைப்படங்கள் குறித்து விவாதிப்பது அல்லது விழுந்து விழுந்து சிரிப்பது என  மாணவர்களுக்கு இடையிலான அன்னியோன்னியமாக சம்பாசணைகளின் போது இந்த வார்த்தைக்கு பஞ்சம் கிடையாது. “புரோ, எனக்கு பாடக்குறிப்புக்களை அனுப்புங்கள்,” அல்லது “புரோ, போட்டியைப் பார்க்க போவோம்,” போன்றவையை நாம் செவிமடுக்கின்ற போது இனம், மதம், பால், அல்லது பிறப்பிடம் என பேதங்கள் எவையும் ஒரு பொருட்டே அல்ல என்ற அளவுக்கு நட்பு வட்டம் விரிகின்றது.

 

பாரம்பரிய சிந்தனையை எடுத்துக்கொண்டால் குடும்பம் எனும் போது உயிரியல் ரீதியான உறவுமுறையொன்று அடிப்படையாகவுள்ளது. எனினும் SLIIT ஐ எடுத்துக் கொண்டால் இத்தகைய எந்தவொரு தேவைப்பாடும் கிடையாது. 100 க்கும் மேற்பட்ட கற்கைநெறிகளைக் கற்கின்ற 25,000 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட ஒரு சமூகத்தில் நட்பு வட்டாரம் மிகவும் ஆழமாக மலர்கின்றது. ஒரே குடும்பம் என்ற உணர்வு அவர்களுக்குள் எழுகின்றது. ஆண்டுதோறும் மே 15 அன்று சர்வதேச குடும்பங்கள் தினம் கொண்டாடப்படும் வேளையில் எமது அடையாளங்களைத் தோற்றுவிக்கும் குடும்பத்தின் முக்கியத்துவத்தை நாம் நினைவுபடுத்தி வருவதுடன், SLIIT ல் மிகவும் ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ள இக்குழுக்களின் நட்புறவும் அதற்கு விதிவிலக்கல்ல.

 

எத்தனையோ மாணவர்கள் பல்கலைக்கழக அனுபவத்தை நிச்சயமற்ற ஒரு பின்னணியில் ஆரம்பிக்கின்றனர். அறிமுகமற்ற முகங்களால் சூழப்படுகின்றமை மற்றும் புதிய எதிர்பார்ப்புக்கள் ஆரம்பத்தில் அச்சமூட்டுவதாக அமையக்கூடும். எனினும் இத்தகைய தருணங்களின் போதே நீண்ட கால பிணைப்பு தோற்றம் பெறுகின்றது. ஆரம்பத்தில் இடம்பெறும் எளிய அறிமுகம், விரிவுரைகளின் போது பகிரப்படுகின்ற புன்னகைகள், குழுமட்ட ஒப்படைப் பணிகளின் போது ஒன்றுபட்ட உழைப்பு ஆகியன வழக்கமாக அர்த்தமுள்ள நட்புறவுகளின் ஆரம்பங்களாக அமைகின்றன.

 

SLIIT கொண்டுள்ள வலுவான பல்கலைக்கழக வாழ்வு இத்தகைய நட்புறவுகளை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கல்விப்பீடங்களை முன்னிலைப்படுத்திய நிகழ்வுகள், விளையாட்டுச் செயற்பாடுகள், மாணவர் சங்கங்கள் மற்றும் கழகங்கள் போன்றவற்றின் மூலமாக எவ்விதமான பேதங்களுமின்றி ஒத்துழைப்பதற்கு மாணவர்கள் தூண்டப்படுகின்றார்கள். மிக முக்கியமாக, முரண்பட்ட சிந்தனைகளுக்கு முகங்கொடுக்கும் போதும் கூட வளர்ச்சி மற்றும் தனிப்பட்ட பிரதிபலிப்பினை ஊக்குவிக்கும் வகையில் இச்சூழல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக ஒரே சமூகம் என்ற வலுவான உணர்வு வளர்க்கப்படுவதுடன், சவால்மிக்க நிலைமைகளில் திறன்மிக்க வழியில் வளம் காணும் ஆற்றல் மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கப்படுகின்றது.

 

இந்த உறவுமுறைகளில் காலப்போக்கில் வளர்ச்சி காண்கின்றன. ஒன்றாகக் கற்றவர்கள், ஊக்குவித்தவர்கள் மற்றும் உணர்வுபூர்வமாக ஆதரவளித்த கட்டமைப்புக்களின் நண்பர்கள் பட்டப்படிப்பை நிறைவு செய்து வெளியேறிய பின்னரும் தமக்கிடையில் நட்பைத் தொடர்கின்றனர். எத்தனையோ பழைய மாணவர்களைப் பொறுத்தவரை தமது பல்கலைக்கழக அனுபவத்தில் மிகவும் பொக்கிசமான அம்சமாக நட்புறவுகளைக் கருதுகின்றனர். தொழில்ரீதியாக வாழ்வில் முன்சென்றால் கூட அவர்களுக்கு இடையிலான பிணைப்பு வலுவாக தொடர்வதுடன், ஒருவருக்கொருவர் ஆதரவு, ஒத்துழைப்பு, மற்றும் நட்பைத் தொடரும் வகையில் நட்பு வட்டாரங்கள் வலுப்பெறுகின்றன.

 

SLIIT ல் தற்போது தனது மூன்றாவது வருட கற்கையை முன்னெடுத்து வருகின்ற ஹர்ஷன அவர்கள் குடும்பம் என்பது நாம் எங்கிருந்து வருகின்றோம் என்பது மாத்திரமன்றி, நாம் எமக்குள் ஏற்படுத்தும் பிணைப்புக்கள் மூலமாகவும் தீர்மானிக்கப்படுகின்றது என்பதை மறக்காமல் செயற்படுவது முக்கியமென குறிப்பிட்டார். நாமே ஏற்படுத்திக் கொள்வனவே சில சமயங்களில் வலுவான பிணைப்புமிக்க குடும்பங்களாக அமைவதை SLIIT ல் ஏற்படுத்திக் கொண்ட நட்புக்கள் எமக்குக் கற்பிக்கின்றன என்றும் குறிப்பிட்டார்.

 

நாங்கள் அமைதியான விரிவுரை மண்டபங்களில் உரக்கச் சிரித்த, சீக்கிரமாக முடித்துவிடுவோம் என்று சத்தியம் செய்த ஒப்படைக் காலக்கெடுவுக்காக அழுது புலம்பிய, எப்படியோ சிற்றுண்டிச்சாலை மேசைகளுக்கும் கடைசி நேரச் சமர்ப்பிப்புகளுக்கும் இடையில் நட்புடன் வளர்ந்த ஒரு கும்பல்.

 

SLIIT ல் வாழ்வு என்பது விரிவுரைகள், ஒப்படைக் காலக்கெடுக்கள், மற்றும் பட்டமளிப்பு விழா புகைப்படங்களுக்கும் அப்பாற்பட்டது. சாதாரண தருணங்களை வாழ்நாள் முழுவதும் நீளுகின்ற மறக்க முடியாத நினைவுகளாக மாற்றுகின்றவர்கள் தமக்கிடையில் அறிமுகத்தை ஆரம்பிக்கின்ற பயணத்திற்கு இது வித்திடுகின்றது.

 

 

 

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading