Local

இலங்கையை மிரட்டுகிறது படைப்புழு – ஒழிக்க விசேடத் திட்டம்!

சேனா எனப்படும் படைப்புழுவை ஒழிப்பதற்காக உயிரியில் ரீதியில் கட்டுப்படுத்தும் வகையில் ; மூன்று நுண்ணுயிர்களை அறிமுகப்படுத்துவதற்கான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பௌதீக ரீதியிலான முறை,இந்த புழுவை கட்டுப்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமானதாகும். இதற்கு மேலதிகமாக புழுவை ஒழிப்பதற்காக வைரஸ்கள் உள்ளடக்கிய பொருட்கள் சிலவற்றையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சேனை பயிர்ச் செய்கை பூச்சியியல்துறை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவகத்தின் தலைமை அதிகாரி எஸ்.எஸ். வெலிகமகே தெரிவித்துள்ளார்.

கிருமிநாசிகள் சிலவும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் படைப்புழு பரவியுள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading