சுதேசி கொஹொம்ப பேபி சவர்க்காரத்திற்கு இலங்கை தர நிர்ணய கட்டளை நிறுவனத்தினால் (SLSI) SLS சான்றிதழ்
கொஹொம்ப பேபி சவர்க்காரம் குழந்தையின் சருமத்திற்கு பாதுகாப்பானது என்பதுடன், மிருதுவானது என சான்றளிக்கப்பட்டுள்ளதை இந்த SLS சான்றிதழ் தாய்மார்களுக்கு உறுதிப்படுத்துவதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. இயற்கையான, மிருதுவான பாதுகாப்பு மற்றும் மூலிகைகள் மீதான நம்பிக்கை ஆகியன கொஹொம்ப பேபி பராமரிப்பு தயாரிப்புகளின் அடையாளங்களாகத் திகழ்வதுடன், இலங்கையில் மிகவும் நம்பிக்கையான மற்றும் மிகவும் விரும்பப்படும் மூலிகை சார்ந்த குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமங்களில் ஒன்றாக இது தன்னை நிலைநிறுத்திக் கொள்ள உதவியுள்ளது. SLS இனால் சான்றளிக்கப்பட்ட உயர்தர தரநிலைகள் மற்றும் செயன்முறைகளை பின்பற்றுவதன் மூலம், தமது குழந்தை கொஹொம்ப பேபியின் பாதுகாப்பான இயற்கையான அரவணைப்பில் இருப்பதை புதிய பெற்றோருக்கு நிம்மதியுடன் உறுதி செய்து கொள்ளலாம் என சுதேசி நிறுவனத்தின் பிரதித் தலைவியும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருமான சுலோதரா சமரசிங்க தெரிவித்துள்ளார்.
SLS 547 என்பது குழந்தைகளுக்கான சவர்க்காரத்திற்கான இலங்கை கட்டளை விபரக்குறிப்பாகும் (Sri Lanka Standard Specification for Baby Soap). இது குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் சவர்க்காரங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகிய தேவைகளை நிர்ணயிக்கிறது. குழந்தைகளுக்கான சவர்க்காரங்கள் பாதுகாப்பானவை, எரிச்சலூட்டாதவை, உயர்தரமானவை, மென்மையானவை மற்றும் குழந்தைகளின் சருமத்திற்கு ஏற்றவை என்பதை உறுதி செய்வதற்கான தேவைகளை SLS 547 தரநிலை உள்ளடக்கியுள்ளது. இந்தத் தரநிலையானது இறக்குமதி மற்றும் உள்ளூர் உற்பத்தி ஆகிய இரண்டிற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், இது SLSI இறக்குமதி ஆய்வுத் திட்டத்தின் கீழ் சரிபார்க்கப்படுகிறது.
SLS நிறுவனம் சந்தையில் சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளின் கடுமையான தரநிலைகளையும் தொடர்ச்சியான சோதனைகளையும் பேணி வருவதால், இந்த SLS சான்றிதழானது ஒரு தயாரிப்பின் நிலையான தரம் குறித்து நுகர்வோருக்கு நம்பிக்கையை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எமது SLS 547 சான்றிதழுக்கு மேலதிகமாக, கொஹொம்ப பேபி சவர்க்கார தயாரிப்புகள் சர்வதேச ரீதியில் சரும மருத்துவ ரீதியாக பரிசோதிக்கப்பட்டு (dermatologically tested), குழந்தைகளின் சருமத்திற்கு பாதுகாப்பானது என சான்றளிக்கப்பட்டுள்ளன. ஒரு வர்த்தகநாமம் எனும் வகையில், கொஹொம்ப பேபி ISO 9001:2015 தரநிலைக்கு இணங்குவதை உறுதி செய்கிறது. இதன் மூலம் நாட்டில் சிறந்த மற்றும் பாதுகாப்பான தரமான மூலிகை தயாரிப்புகளை அது வழங்குகிறது.
சுதேசி நிறுவனமாகிய நாம் 1941 ஆம் ஆண்டு முதல் மிதமான மூலிகை சவர்க்காரங்களை தயாரித்து வருவதுடன், உயர் தர நிலைகளைப் பின்பற்றி வருகிறோம். தற்போது எமது நுகர்வோருக்கு மேலதிக மதிப்பை வழங்கும் நோக்கில் Coconut Milk (தேங்காய்ப்பால்), Rathmal (இக்சோரா மலர்), Venivel (மரமஞ்சள்) Avocado (ஆனைக்கொய்யா) போன்ற இயற்கையின் சிறந்த மூலப்பொருள் கலவைகளுடன் கொஹொம்ப பேபி வர்த்தகநாம சவர்க்காரங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். SLSI மற்றும் NMRA ஆகியவற்றின் மதிப்பீட்டுக் குழுவானது, இந்த சான்றிதழின் செல்லுபடியாகும் தன்மையை உறுதி செய்துள்ளது.
கொஹொம்ப பேபி சவர்க்காரமானது கொஹொம்ப (வேம்பு), தேங்காய்ப்பால், கற்றாழை, மரமஞ்சள், ஆனைக் கொய்யா, இக்சோரா மலர் போன்ற இயற்கையின் சிறந்த கொடைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இவை உடலை தூய்மைப்படுத்துவதற்கும், ஈரப்பதனுடன் பேணுவதற்கும், சருமத்தின் மிருதுவான தன்மையை உறுதி செய்வதற்கும் தலைமுறை தலைமுறையாகப் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், குழந்தையின் மென்மையான சருமத்திற்கு முழுமையாக பாதுகாப்பானதுமாகும். சுதேசி கொஹொம்ப பேபி சவர்க்காரம் சரும மருத்துவ ரீதியாக பரிசோதிக்கப்பட்டு, குழந்தைகளின் சருமத்திற்கான பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொஹொம்ப பேபி சவர்க்காரம் குழந்தையின் சருமத்தை எரிச்சல்களிலிருந்து பாதுகாப்பதுடன், சருமத்திற்குத் தேவையான அத்தியாவசிய போசணையையும் வழங்குகிறது. உள்ளூர் சந்தையில் சிறந்த மூலிகைக் கலவையைக் கொண்ட ஒரேயொரு குழந்தைகளுக்கான சவர்க்காரம் இதுவாகும் என்பதுடன், சருமத்திற்கு மிருதுவான புதிய இதமான நறுமணங்களுடன் இது மேம்படுத்தப்பட்டுள்ளது. கொஹொம்ப பேபி தனிநபர் பராமரிப்பு தயாரிப்பு வரிசையானது, குழந்தையின் சருமத்தை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும், மிருதுவாகவும், ஈரப்பதனுடனும் வைத்திருக்கும். இது குழந்தை வசதியாக இருப்பதற்கு இன்றியமையாதது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் முக்கிய மூலப்பொருளான கொஹொம்ப (வேம்பு), பல நூற்றாண்டுகளாக இலங்கைத் தாய்மார்களால் பயன்படுத்தப்பட்டு வரும் காலத்தால் சோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட ஒரு மூலப்பொருள் ஆகும். 85 ஆண்டுகளுக்கும் மேலாக மூலிகை தனிநபர் பராமரிப்பு நிபுணராகத் திகழும் சுதேசி நிறுவனம், மிக உயர்ந்த தரநிலைகளுடன் சிறந்த மூலிகைக் கலவையாக உங்களுக்கு வழங்கப்படுவதற்காக இந்த மூலிகைகளை கவனமாக தெரிவு செய்துள்ளது. இந்த மூலிகைக் கலவைகள் குழந்தைகளைக் குளிப்பாட்டவும், கிருமிகளை இயற்கையான முறையில் கழுவி நீக்கவும் தலைமுறை தலைமுறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மூலிகை மூலப்பொருட்களைப் பயன்படுத்துவது எப்போதும் சருமத்தில் பாதுகாப்பானதும் மிதமானதுமாகும்.
பேபி சவர்க்காரம், பேபி கொலோன், பேபி கிரீம், பேபி பவுடர், பேபி ஷாம்பு, பேபி ஒயில், கிட்ஸ் கொலோன், பேபி கிஃப்ட் பெக் ஆகியவற்றை உள்ளடக்கிய கொஹொம்ப பேபி தயாரிப்பு வரிசையானது, காலத்தால் சோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட மூலிகைகளைக் கொண்ட மூலப்பொருட்களின் கலவையாகும். இதன் மூலம் உள்ளூர் சந்தையில் விரிவான மூலிகை குழந்தை பராமரிப்பு வரிசையாக இதனை மாற்றுகிறது.
“சுதேசி நிறுவனத்தின் தயாரிப்புகள் சிறந்த ஆரோக்கியம், சுகாதாரம், பாதுகாப்பு, சருமத்தின் மிதமான தன்மை ஆகியவற்றிற்காக இயற்கை நட்பு தயாரிப்புகளைத் தேடுகின்ற, வளர்ந்து வரும் சந்தைப் பிரிவின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. நாட்டின் முன்னணி மூலிகை தனிநபர் பராமரிப்பு தயாரிப்பு நிறுவனம் என்ற வகையில், சுதேசி தனது அனைத்து தயாரிப்புகளிலும் பயன்படுத்தும் மூலிகை மூலப்பொருட்களின் செயற்பாட்டு நன்மைகள் குறித்து நுகர்வோர் மேலும் அறிந்து கொள்வதை நாம் விரும்புகிறோம். எமது தயாரிப்புகளில் நாம் இலங்கையின் சிறந்த மூலிகைகளை மாத்திரமே பயன்படுத்துகிறோம். அத்துடன் அனைத்து மூலப்பொருட்களும் விரிவாக ஆராய்ச்சி செய்யப்பட்டு, தயாரிப்புகளின் தரம் முழுமையாக சோதிக்கப்படுகிறது. எமது அனைத்து தயாரிப்புகளும் 100% தாவர வகையை (Vegetarian) சார்ந்தவை ஆகும். விலங்குகளில் அவை பரிசோதிக்கப்படாதவை என்பதுடன் விலங்குகள் மீதான கொடுமை அற்றவை (Cruelty free) ஆகும். சுதேசி கொஹொம்ப, ராணி சந்தனம், சுதேசி கொஹொம்ப பேபி உள்ளிட்ட சுதேசி தயாரிப்புகள் பிரிட்டனின் ‘Vegetarian Society’ அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது நிறுவனத்தின் எதிர்காலத்தை நோக்கிய செயற்பாடுகளுக்கும், நுகர்வோர் நெறிமுறை ரீதியான மற்றும் சூழல் நட்புத் தெரிவுகளை மேற்கொள்வதற்கு உதவ வேண்டும் எனும் அதன் விருப்பத்திற்கும் ஒரு சான்றாகும். நிறுவனம் எப்போதும் தனது தயாரிப்புகளில் ஆரோக்கியம் மற்றும் சூழல் தாக்கத்தை கருத்தில் கொண்டு செயற்படுவதுடன், அதற்கு தொடர்ச்சியாக முன்னுரிமை அளித்து வருகிறது. முற்றிலும் இலங்கை நிறுவனமான சுதேசி, கடந்த 85 ஆண்டுகளில் இத்தொழில்துறையில் பல்வேறு முதன்மையான விடயங்களை தன்வசப்படுத்தியுள்ளது.
அனைத்து சுதேசி தயாரிப்புகளும் இலங்கை சுகாதார அமைச்சின் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் (NMRA) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுதேசி தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அனைத்து நறுமணங்களும் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நறுமண சங்கத்தினால் (IFRA) சான்றளிக்கப்பட்டதுடன், ISO 9001:2015 தரநிலைகளின் கீழ் தயாரிக்கப்படுகின்றன.

You must be logged in to post a comment.