Local

ஐ.தே.க. பக்கம் தாவியோருக்கு அமைச்சுப்பதவி இல்லை – சு.க. மத்தியக்குழுவில் அதிரடி முடிவு!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தீர்மானத்தைமீறும் வகையில் ஐக்கிய தேசியக்கட்சி அரசுக்கு ஆதரவளித்துள்ள கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படக்கூடாது என சு.கவின் மத்தியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கூடியது.

இதன் போதே, கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை தாண்டி புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் அந்தக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

அரசாங்கத்துடன் இணையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்காதிருக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading