Jobs

19ஆவது ஆசிய பசுபிக் குழந்தை மருத்துவ காங்கிரஸில் இலங்கை சிறுவர் நல மருத்துவக் கல்லூரியுடன் பேபி செரமி கைகோர்ப்பு

இலங்கையின் மிகவும் விரும்பப்படுகின்றதும் நம்பிக்கைக்குரியதுமான குழந்தைப் பராமரிப்பு வர்த்தகநாமமான ‘பேபி செரமி’ (Baby Cheramy), 19ஆவது ஆசிய பசுபிக் குழந்தை மருத்துவக் காங்கிரஸில் (19th Asia Pacific Congress of Paediatrics – APCP) இலங்கை சிறுவர் நல மருத்துவக் கல்லூரியுடன் (SLCP) கைகோர்ப்பதன் மூலம், இலங்கை குழந்தைகளுக்கான, தனிநபர் பராமரிப்புப் பிரிவில் நம்பிக்கையான தனது தலைமைத்துவ நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இம்மாநாட்டில், புதிதாக மீள் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு நன்மைகளைக் கொண்ட தனது குழந்தைப் பராமரிப்பு தயாரிப்பு வகைகளை நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது. இவை குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு மென்மையான மற்றும் பயனுள்ள பராமரிப்பை வழங்க மேம்பட்ட மூலப்பொருட்களின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு தயாரிப்புகளானவை தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நிபுணர்களால் மூன்று முறை சோதிக்கப்படுவதுடன், சருமத்தின் இயற்கையான பாதுகாப்பு கவசத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இயற்கையான செரமைட்டுகளால் செறிவூட்டப்பட்டுள்ளன. அனைத்து பராமரிப்பு தயாரிப்புகளும் ‘குழந்தைகளுக்குப் பாதுகாப்பானவை’ என சான்றளிக்கப்பட்டுள்ளது. சிறு குழந்தைகளுக்கு ஏற்ற நம்பிக்கையான பராமரிப்புத் தீர்வுகளை வழங்குவதற்கான பேபி செரமியின் அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது. இந்த பராமரிப்பு தயாரிப்புகளில், ஒவ்வாமையை ஏற்படுத்தாத மூலம்பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கிறீம்களும் காணப்படுகின்றன. இவை குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்தே அவர்களுக்குப் பயன்படுத்த பாதுகாப்பானவை என்பதுடன் மிருதுவான பராமரிப்பையும் வழங்குகின்றன. பேபி செரமி இந்த மாநாட்டில் பங்கேற்றதன் மூலம், இலங்கை மற்றும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த சுகாதார நிபுணர்களுடன் இணைந்து செயற்பட்டதுடன், உயர் தரத்துடனான குழந்தைப் பராமரிப்பு தயாரிப்புகளின் முக்கியத்துவம், தயாரிப்பின் பாதுகாப்பு, அவற்றின் தயாரிப்பின் பின்புலத்திலுள்ள விஞ்ஞானம் குறித்தும் எடுத்துக் கூறியது.

இந்தக் கூட்டாண்மை குறித்து கருத்துத் தெரிவித்த Hemas Consumer Brands நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷியான் ஜயவீர, “பிராந்தியத்திலுள்ள முன்னணி குழந்தை மருத்துவ மன்றங்களில் ஒன்றான இலங்கை சிறுவர் நல மருத்துவக் கல்லூரியுடன் கூட்டணியை ஏற்படுத்தியதற்கான பேபி செரமியின் நோக்கமானது விஞ்ஞானம், பாதுகாப்பு மற்றும் நிபுணத்துவத்தின் ஆதரவுடன் பெற்றோருக்கு நம்பிக்கையை தரக்கூடிய தயாரிப்புகளை உருவாக்குவதாகும். எமது அர்ப்பணிப்பு அன்றாட குழந்தைப் பராமரிப்பு தயாரிப்புகளை வழங்குவதற்கும் அப்பால், தாய்மார்கள் எதிர்பார்க்கின்ற குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. இத்துறையில் காணப்படும் நவீன முன்னேற்றங்கள் பற்றிய எமது அறிவை மேம்படுத்தும் வகையில் உரிய நிபுணர் குழுக்களுடன் கூட்டுச் சேர்ந்து பணியாற்றுவதற்கும் அப்பால், குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மூலப்பொருள் கலவைகளை உருவாக்குவதன் மூலம் எமது தயாரிப்புகளும் சூழலியலும் இணைந்து குழந்தை பராமரிப்புக்கான ஒட்டுமொத்த தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதில் நாம் கவனம் செலுத்துகிறோம். கெயார் (Care), நொரிஷ் (Nourish), காம் (Calm), புரொட்டக்ட் (Protect) போன்ற புதிய பேபி செரமி தயாரிப்புகளின் ஒவ்வொரு வகையும் குறிப்பிட்ட நன்மைகளை வழங்குவதாக கண்டறியப்பட்ட நவீன பொருட்களுடன் உருவாக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு தயாரிப்பும் கொண்டுள்ள பாதுகாப்பினை உறுதிப்படுத்த, வெளியக நிபுணர்களின் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மருத்துவ சமூகத்துடனான எமது கூட்டாண்மைகள் மூலம், குழந்தைகளின் தேவைகள் பற்றிய எமது புரிதலை தொடர்ச்சியாக வலுப்படுத்துவதுடன், ஒவ்வொரு குழந்தைக்கும் ஆரோக்கியமான ஆரம்பத்தை வழங்குவதற்கு ஆதரவளிக்கும் நம்பிக்கையான பராமரிப்புத் தீர்வுகளை உருவாக்குகிறோம்.” என்றார்.

இம்மாநாடு முழுவதும், பேபி செரமி குழுவினர் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடி, நிபுணத்துவ அடிப்படையிலான தயாரிப்புகளின் மேம்பாடு, இறுக்கமான பாதுகாப்புத் தரநிலைகள், குழந்தைகள் மற்றும் பெற்றோரின் அதிகரித்து வரும் தேவைகளைப் புரிந்து கொள்ளல் உள்ளிட்ட குழந்தைப் பராமரிப்பில் இவ்வர்த்தகநாமத்தின் தனித்துவமான அணுகுமுறை பற்றிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டனர். இலங்கை சிறுவர் நல மருத்துவக் கல்லூரியுடனான (SLCP) இந்த கூட்டணியானது, சுகாதார நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும், தகவலறிந்த தயாரிப்புத் தெரிவுகள் மற்றும் தரமான குழந்தைப் பராமரிப்பு பற்றிய அதிக விழிப்புணர்வை ஆதரவளிப்பதற்குமான பேபி செரமியின் அர்ப்பணிப்பை வலுப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கியது.

இவ்வர்த்தகநாமம் தங்களது பேபி செரமி டயபர்கள் மற்றும் பேன்ட்ஸ் தயாரிப்பு வகைகளையும் இங்கு வெளிப்படுத்தியது. இவை குழந்தைகளுக்கு பாதுகாப்பான பயன்பாட்டிற்காக சரும மருத்துவ ரீதியாக பரிசோதிக்கப்பட்டு, சரும எரிச்சலை ஏற்படுத்தாது என நிரூபிக்கப்பட்டுள்ளன. தொப்புள் கொடி வெட்டுப்பகுதியைக் கொண்ட புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான டயபர்கள் முதல் சுறுசுறுப்பான குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட பேபி பேன்ட்ஸ் வரை, இத்தயாரிப்பு வகைகளானவை, குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு இதமானதாக இருக்கும் அதே வேளையில், சிறந்த சௌகரியத்தையும் வழங்குகிறது. இது குழந்தையின் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஏற்றதாக அமைகிறது.

19ஆவது ஆசிய பசுபிக் குழந்தை மருத்துவக் காங்கிரஸில் பேபி செரமியின் பங்கேற்பானது, இலங்கையில் குழந்தைப் பராமரிப்பின் தரத்தை உயர்த்த உதவுவதற்காக விஞ்ஞான நிபுணத்துவம், தயாரிப்பில் புத்தாக்கம், நோக்கத்தை அடிப்படையாக கொண்ட நடவடிக்கை ஆகியவற்றை ஒன்றிணைப்பதற்கான அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. சுகாதார நிபுணர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுதல், பாதுகாப்பான தயாரிப்புகளில் முதலீடு செய்தல் மற்றும் பெற்றோரை விழிப்புணர்வடையச் செய்வதனை ஆதரிப்பதன் மூலம் பேபி செரமி பெற்றோருக்கு ஆதரவளிப்பதுடன், ஒவ்வொரு குழந்தைக்கும் ஆரோக்கியமான ஆரம்ப பருவத்தை உருவாக்கும் முயற்சியை கொண்ட தனது நோக்கத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்கிறது.

 

Hemas Consumer Brands பற்றி
60 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் வீட்டுப் பராமரிப்பு மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னணியில் உள்ள ஹேமாஸ் கொன்சியூமர் பிராண்ட்ஸ், ஒரு சிறந்த எதிர்காலத்தை நோக்கி அடியெடுத்து வைப்பதற்காக குடும்பங்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இலங்கையில் தங்களது நோக்கம் சார்ந்த வர்த்தகநாமங்களை நம்பிக்கையான வீட்டுப் பெயர்களாக நிறுவுவதற்கு உதவிய வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட திட்டங்களில் புத்தாக்கத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் உள்ளூர் தகவல் தரவுகளைப் பயன்படுத்துவதில் இந்நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. இலங்கை நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் அதன் தயாரிப்புகள் மூலம் சிறந்த தரம் மற்றும் மதிப்பை வழங்குவதற்கான மாறாத அர்ப்பணிப்புடன், நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை ஹேமாஸ் கொன்சியூமர் பிராண்ட்ஸ் தொடர்ச்சியாக மேம்படுத்தி வருகிறது.

 

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading