Jobs

HSBC மற்றும் Nations Trust Bank வழங்கும் Ceylon Literary & Arts Festival 2027

HSBC மற்றும் Nations Trust Bank வழங்கும் Ceylon Literary & Arts Festival (CLAF), 2027 ஜனவரி 22 முதல் 24 வரை Cinnamon Lakeside Colomboவில் நடைபெறவுள்ளது. இலங்கையின் Soft Power-ஐ மேம்படுத்துவதும், அதன் படைப்பாற்றல் அடையாளத்தை வலுப்படுத்துவதும் CLAF-இன் முக்கிய நோக்கங்களாகும்.

இம்முறை 15க்கும் மேற்பட்ட கலந்துரையாடல் அமர்வுகளில், இலங்கை மற்றும் சர்வதேச இலக்கியத் துறைகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்கவுள்ளனர். Ikigai நூலின் மூலம் புகழ்பெற்ற Francesc Miralles, Sir Alexander McCall Smith, New York Times அதிகம் விற்பனையான நூல்களில் முதலிடத்தைப் பெற்ற கவிஞர் Nikita Gill, International Booker Prize நடுவர் Nilanjana S Roy மற்றும் Nebula Award வென்ற Vajra Chandrasekera ஆகியோர் முதற்கட்டமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள எழுத்தாளர்களில் அடங்குகின்றனர். பேரா ஏரிக்கரையில் நடைபெறும் இந்த விழா, “Festival on Beira” என்றும் அழைக்கப்படுகிறது.

இலங்கையின் இலக்கியம், கலை, இசை மற்றும் திரைப்படம் உள்ளிட்ட படைப்பாற்றல் துறைகள் வழியாக நாட்டின் Soft Power-ஐ வளர்ப்பது CLAF-இன் செயற்பாடுகளுக்கு வழிகாட்டுகிறது. இளைஞர்களை மையப்படுத்திய அணுகுமுறையும் இதில் முக்கிய இடம் பெறுகிறது. முதல் பதிப்பின் தொடக்க அமர்வு கண்டி Trinity College-இல் நடைபெற்றது. பல இளம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியதால் இலங்கை திறமையாளர்கள் வெளியேறும் சவாலை எதிர்கொண்டிருந்த காலத்தில் இந்த விழா திட்டமிடப்பட்டது. அந்தப் போக்கை மாற்ற உதவுவதும் அதன் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

இளைஞர்களுடனான ஈடுபாட்டை விழா முக்கியத் தூணாகக் கருதுகிறது. அதன் Future Writers நிகழ்ச்சியில் பங்கேற்ற Savin Edirisinghe, தனது முதல் முயற்சியிலேயே Gratiaen பரிசை வென்றுள்ளார்.

“Ceylon Literary & Arts Festival, இலங்கையின் கலை மற்றும் கலாசாரத் துறைகளை முன்னெடுத்துச் செல்லும் ஒரு மூலோபாயத் தளமாக அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் Soft Power-ஐ வளர்ப்பதில் கவனம் செலுத்தும் இந்த விழா, அதன் நான்காவது பதிப்பில் சர்வதேச அளவிலான தனது வரம்பை விரிவுபடுத்தி, தெற்காசியாவின் முக்கிய விழாக்களில் ஒன்றாக உருவெடுக்கும் நோக்கில் செயற்படுகிறது. கதைகள் மக்களைச் சந்திக்கும் இடமாகவும், இலக்கியம், கலை, இசை மற்றும் திரைப்படத்துக்கான தெற்காசிய சந்திப்புத் தளமாகவும் கொழும்பை உருவாக்க நாங்கள் முயற்சிக்கிறோம். படைப்பாற்றல் மிக்க நகரமாக கொழும்பை முன்னிறுத்துவதுடன், அடுத்த தலைமுறையினருக்கான புதிய வாய்ப்புகளையும் இந்த விழா திறக்கிறது,” என்று Ceylon Literary & Arts Festival நிறுவனர் Ajai Vir Singh தெரிவித்தார்.

இலக்கிய நிகழ்ச்சிகளை Mita Kapur தொகுத்து வழங்குகிறார். Sahitya Akademi Award வென்ற Anuradha Roy, Forward Prize வென்ற கவிஞர் Tishani Doshi மற்றும் Gratiaen Prize வென்ற Ramya Chamalie Jirasinghe ஆகியோரும் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறுகின்றனர். James Patterson உடன் இணைந்து எழுதிய திரில்லர் நாவல்கள் New York Times அதிகம் விற்பனையான நூல்கள் பட்டியலில் இடம்பெற்ற Ashwin Sanghi மற்றும் எழுத்தாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான Tanya Selvaratnam ஆகியோரும் மேடையேறவுள்ளனர்.

“நான்கு பதிப்புகளைக் கடந்துள்ள நிலையில், இந்த விழா இன்று அடைந்துள்ள வளர்ச்சிக்கு ஆதரவளித்திருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்,” என்று HSBC Sri Lanka பிரதம நிறைவேற்று அதிகாரி Mark Surgenor தெரிவித்தார்.

John Keells Foundation உடன் இணைந்து நடத்தப்படும் கலைக் கண்காட்சியில், “Kinesis” என்ற கருப்பொருளின் கீழ் 10க்கும் மேற்பட்ட கலைஞர்களின் படைப்புகள் இடம்பெறுகின்றன. உடல், சமூகம், கடல் மற்றும் கூட்டுச் செயல்பாடு ஆகியவற்றில் இயக்கம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதையும், ஒன்றிணைந்து எவ்வாறு முன்னேறலாம் என்பதையும் இந்தக் கண்காட்சி ஆராய்கிறது. கலைஞர்கள், கலைக் குழுக்கள், இசைக்கலைஞர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் பதிப்பாளர்களை ஒன்றிணைக்கும் வகையில், மேலும் பல ஊடாடும் கலைநிறுவல்களும் இம்முறை இடம்பெறுகின்றன.

“Story Junction” என்ற கருப்பொருளில் நடைபெறும் சிறுவர் விழாவில், 4 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்காக இரண்டு நாட்களில் 15க்கும் மேற்பட்ட சிறப்பாகத் தொகுக்கப்பட்ட பயிலரங்குகள் இடம்பெறும். பொம்மலாட்டம், படைப்பெழுத்து, அனிமேஷன் மற்றும் நூல் வாசிப்பு முதல் இசை மற்றும் நாடகம் வரை, ஒவ்வொரு சிறுவருக்கும் ஏற்ற அமர்வுகள் இதில் இடம்பெறுகின்றன.

நிகழ்த்துக் கலைப் பிரிவில் இசை, நாடகம் மற்றும் திரைப்படம் இடம்பெறுகின்றன. இலக்கிய அமர்வுகளுடன், நேரடி இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள் மற்றும் திரைப்படத் திரையிடல்களையும் பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம். முழுமையான நிகழ்ச்சி நிரல் டிசம்பரில் அறிவிக்கப்படும்.

இவ்வாண்டு விழா தனது இளைஞர் நிகழ்ச்சிகளை விரிவுபடுத்தி, இளம் இலங்கையர்கள் பங்கேற்பதற்கான கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இளைஞர்களை மையப்படுத்திய கலந்துரையாடல்களுடன், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் சக இளைஞர்களுடன் தொடர்புகொள்வதற்கான புதிய தளங்களும் அமைக்கப்படுகின்றன. இளைஞர்களை வளர்ப்பதற்கான விழாவின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, அனைத்து மாணவர்களும் இலவச மாணவர் அனுமதிச் சீட்டுகள் மூலம் விழாவில் பங்கேற்கலாம். இதற்கான சிறப்புத் தொண்டர் திட்டம் ஏற்கனவே தொடங்கியுள்ளது. விழாவின் திட்டமிடல் மற்றும் செயலாக்கப் பணிகளில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேரடியாகப் பங்கேற்று அனுபவம் பெற்று வருகின்றனர்.

“சமூகங்களை வளப்படுத்துவதிலும், இலங்கையின் கலாசார அடையாளத்தை உருவாக்குவதிலும் கலை மற்றும் கலாசாரம் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை Nations Trust Bank அங்கீகரிக்கிறது. கலைத் துறையில் எமது ஈடுபாட்டைத் தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நிலையில், இந்த விழாவை முன்னெடுப்பதற்காக HSBC உடன் இணைந்து பிரதான பங்காளியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று Nations Trust Bank பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான Hemantha Gunetilleke தெரிவித்தார்.

இம்முறை Ceylon Literary & Arts Festival, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, காலி மற்றும் கொழும்பில் உள்ள இலங்கையின் முக்கிய நூலகங்களையும் கொண்டாடுகிறது. ஒவ்வொன்றும் 75 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டதுடன், ஆர்வம், கற்றல் மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் மையங்களாகத் திகழ்கின்றன.

“இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிப் பிரிவு விரிவடைகிறது. படைப்பாற்றல் வடிவங்கள் ஒன்றோடொன்று சந்திப்பதே இந்த இணைவின் நோக்கம்: இலக்கியத்துடன் கலை, இசையுடன் நாடகம், கவிஞர்களுடன் நாவலாசிரியர்கள். இந்தக் கலவையில் இளைஞர்களும் இடம்பெற வேண்டும். கலந்துரையாடல்கள், கலை மற்றும் விழாவின் ஏனைய பிரிவுகள் என ஒவ்வொரு தளத்திலும் அவர்களுக்கான இடம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ஒரு நாட்டின் படைப்பாற்றல் அடித்தளம், புதிய தலைமுறைக்கு அது வழங்கும் வாய்ப்புகளின் அளவிலேயே வலுப்பெறுகிறது. நான்காவது பதிப்பில், இதற்கேற்ப இளைஞர் பிரிவும் விரிவடைகிறது,” என்று Ceylon Literary & Arts Festival பணிப்பாளரும் இணை நிறுவனருமான Fazeena Rajabdeen தெரிவித்தார்.

ஜனவரி 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறும் இலக்கிய அமர்வுகளுக்கான ஆரம்பகட்ட அனுமதிச் சீட்டுகள் நவம்பர் 30 வரை www.ceylonliteraryfestival.com இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. இலக்கிய அமர்வுகள், சிறுவர் விழா மற்றும் சிறப்பு நிகழ்வுகளுக்கான அனுமதிச் சீட்டுகளை இணையதளத்திலும், விழா நடைபெறும் நுழைவாயிலிலும் பெற்றுக்கொள்ளலாம்.

Ceylon Literary & Arts Festival-ஐ HSBC மற்றும் Nations Trust Bank வழங்குகின்றன. Cinnamon Lakeside Colombo நிகழ்விட மற்றும் விருந்தோம்பல் பங்காளியாக ஆதரவளிக்கிறது. John Keells Foundation, Rukmini Tissanayagam Trust, Clouds by SOZO மற்றும் SOZO ஆகியோரும் பங்காளிகளாக உள்ளனர். Sarasavi புத்தக விற்பனைப் பங்காளியாகவும் Acorn Group பயணப் பங்காளியாகவும் ஆதரவளிக்கின்றன. ஊடகப் பங்காளிகளாக Wijeya Newspapers, Daily FT, Daily Mirror, Sunday Times, Hi!! Online, Hi! Magazine, Hi! மற்றும் The Sun ஆகியவை உள்ளன. HardTalk மக்கள் தொடர்புப் பங்காளியாக உள்ளது.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading