மஹிந்ரா வாகன நிதியுதவிக்கான அணுகலை விரிவுபடுத்த ஐடியல் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் SDB வங்கி கைகோர்த்துள்ளது
தனிப்பயனாக்கப்பட்ட குத்தகை மற்றும் நிதித் தீர்வுகள் மூலம் மஹிந்ரா வாகனத்தைச் சொந்தமாக்கிக் கொள்வதற்கான அணுகலை விரிவுபடுத்துவதற்காக, ஐடியல் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்துடன் SDB வங்கி கைகோர்த்துள்ளது. இந்தக் கூட்டு முயற்சியானது, இலங்கை முழுவதும் உள்ள தனிநபர்கள், தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் வர்த்தகப் போக்குவரத்து நடத்துனர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், SDB குத்தகை சேவையை ஐடியல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முகவர் வலையமைப்புடன் இணைக்கிறது.
இந்தக் கூட்டாண்மை, 2026 நவம்பர் 12 அன்று SDB வங்கி தலைமை அலுவலகத்தில் SDB வங்கிக்கும் ஐடியல் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் முறைப்படுத்தப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், மஹிந்ரா வாகனத்தை கொள்வனவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு குத்தகை மற்றும் பிற நிதிச் சேவைகளை SDB வங்கி வழங்கும். இது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மற்றும் வணிகத் தேவைகளுக்கு ஏற்ற நிதியுதவி விருப்பங்களைக் கண்டறிய உதவும். இரு நிறுவனங்களின் வாடிக்கையாளர் மற்றும் விநியோக வலையமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், நிதியுதவிக்கான அணுகலை மேம்படுத்துவதையும் புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்குவதையும் இந்தக் கூட்டாண்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
SDB வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி மனோஜ் அக்மீமன கூறுகையில், “வாழ்வாதாரங்களுக்கும் வணிக வளர்ச்சிக்கும் சொந்தமாக வாகனமொன்றைக் கொண்டிருப்பது முக்கிய பங்காற்றுகிறது. இந்தக் கூட்டாண்மை மூலம், தனிநபர்களும் வணிகங்களும் தங்கள் இலக்குகளை அடைய உதவும் வகையில், எங்களின் நிதி நிபுணத்துவத்தை ஐடியல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன வழங்கல் மற்றும் முகவர் வலையமைப்புடன் இணைத்து, பொருத்தமான நிதித் தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.”
ஐடியல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சட்ட மற்றும் நிறுவன விவகாரங்கள் பணிப்பாளர் நிமிஷா வெல்கம கூறுகையில், “வாகனத்தைச் சொந்தமாக்கிக் கொள்வதை மேலும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கும், இலங்கையர்கள் ஒரு வலுவான எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் முன்னேற வலுவூட்டுவதற்கும் நாங்கள் கொண்டுள்ள பகிரப்பட்ட உறுதிப்பாட்டில், SDB வங்கியுடனான எங்கள் கூட்டாண்மை ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது. ஐடியல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் வலுத் தீர்வுகளை SDB வங்கியின் நிதி நிபுணத்துவத்துடன் ஒன்றிணைப்பதன் மூலம், நெகிழ்வான மற்றும் வாடிக்கையாளர்களுக்கு உகந்த நிதித் தெரிவுகள் வழியாக நம்பகமான போக்குவரத்துத் தீர்வுகளை அணுகுவதற்கான வாய்ப்புகளை தனிநபர்களுக்கும் வணிகங்களுக்கும் நாங்கள் உருவாக்குகிறோம். நாடு முழுவதும் உள்ள தொழில்முனைவோர், வணிகங்கள் மற்றும் தனிநபர்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பங்களிக்கக்கூடிய நம்பகமான போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதை நாங்கள் கூட்டாக நோக்கமாகக் கொண்டுள்ளோம்.”
கூட்டு சந்தைப்படுத்தல் விளம்பரப் பிரச்சாரங்கள், வாடிக்கையாளர் பரிந்துரை திட்டங்கள், தெருவோர நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் கிளை மட்டத்திலான விளம்பர நடவடிக்கைகள் ஆகியவை SDB குத்தகை மற்றும் மஹிந்ரா வாகனங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய தீர்வுகளுடன் அவர்களை இணைக்கும்.
இந்த ஒப்பந்தம், எளிதில் அணுகக்கூடிய நிதிச் சேவைகள் மூலம் வாழ்வாதாரங்கள் மற்றும் தொழில் மேம்பாட்டிற்கு ஆதரவளிப்பதில் SDB வங்கியின் அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதோடு, அதன் குத்தகை வணிகத்தை மேம்படுத்தி, வாடிக்கையாளர் உறவுகளை வலுப்படுத்துகிறது.
SDB வங்கி பற்றிய விபரங்கள்
ஒவ்வொரு தனிநபரின் தேவைகளுக்கு ஏற்ப வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட மற்றும் விரிவான ஆதரவை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படும், எதிர்காலத்திற்குத் தயாரான வங்கியான SDB வங்கி, இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்ட உரிமம் பெற்ற ஒரு விசேட வங்கியாகும். இது கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான சபையில் பட்டியலிடப்பட்டுள்ளது, Fitch Ratings நிறுவனத்தால் BB+(lka) என தர மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் Lanka Rating Agency நிறுவனத்தின் கடன் மதிப்பீடு BBB- [SL] (Stable) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய தனது 93 கிளைகளின் வலையமைப்பு மூலம், இந்த வங்கி நாடு முழுவதும் உள்ள தனது தனிநபர், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கூட்டுறவு மற்றும் வணிக வங்கி வாடிக்கையாளர்களுக்கு விரிவான நிதிச் சேவைகளை வழங்குகிறது. சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகக் கோட்பாடுகள் SDB வங்கியின் நெறிமுறைகளில் ஆழமாக வேரூன்றியுள்ளன. நிலைபேற்றியல் சார்ந்த நடைமுறைகள் மூலம் உள்ளூர் சமூகங்களையும் வணிகங்களையும் மேம்படுத்துவதில் அது உறுதியான கவனம் செலுத்துகிறது. இலங்கையை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்லும் நோக்கில், பெண்களுக்கு வலுவூட்டுதல், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலையான வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதில் இந்த வங்கி குறிப்பாக உறுதிபூண்டுள்ளது.

You must be logged in to post a comment.