2026 ஜனாதிபதி சுற்றாடல் விருது நிகழ்வில் வெள்ளி விருதுகளை வென்ற Hayleys ‘Alumex’
இலங்கையின் முதலிடத்தில் பட்டியிலிடப்பட்டுள்ள பெருநிறுவனமும் (LMD 100 – 2025/26) Hayleys குழுமத்தின் துணை நிறுவனமுமான Alumex PLC (அலுமெக்ஸ் PLC) நிறுவனம், தனது உற்பத்திச் செயற்பாடுகளில் சூழல் பொறுப்புணர்வை ஒருங்கிணைப்பதில் கொண்டுள்ள அதன் அர்ப்பணிப்பை கௌரவிக்கும் வகையில், 2026 ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் (Presidential Environmental Awards 2026) நிகழ்வில் வெள்ளி விருதுகளை வென்றுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் (CEA) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது வழங்கும் நிகழ்வு, 2026 ஒக்டோபர் 19ஆம் திகதி கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது. சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான வளர்ச்சிக்குப் பங்களிக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைக் கௌரவித்த இந்த மதிப்புமிக்க நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார். உலோகம் /இரும்பு அல்லாத உலோகம் /இலத்திரனியல் /மின்சாரப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள், தொடர்பான தொழிற்துறைப் பிரிவுகளில் (வகைகள் A மற்றும் B) Alumex நிறுவனம் வெள்ளி விருதுகளை வென்றது. இது நிறுவனத்தின் நிலைபேறான தன்மைப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லைக் குறிக்கிறது.
இந்தச் சாதனை குறித்து கருத்துத் தெரிவித்த Alumex PLC நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரமுக் தெடிவெல, “பொறுப்பான உற்பத்தியானது, ஒரு நிறுவனமாக நாம் வளங்களைப் பயன்படுத்தும் விதம் மற்றும் எமது சூழல் தாக்கத்தை நிர்வகிக்க நாம் எடுக்கும் கவனத்திலிருந்து ஆரம்பிக்கிறது. எமது ‘Elevate ESG’ செயற்றிட்டம், செயல்திறனை மேம்படுத்தவும், கழிவுகளைக் குறைக்கவும், எமது அன்றாட செயற்பாடுகளின் ஒரு அங்கமாக நிலைபேறான தன்மையை மாற்றவும் வழிவகைகளைத் தேட எமக்கு வழிகாட்டுகிறது. இந்த விருதுகள் எமது அர்ப்பணிப்புக்குக் கிடைத்த ஊக்கமளிக்கும் அங்கீகாரமாகும் என்பதுடன், நிலையான செயற்பாடுகளில் மேலும் முன்னேற்றம் அடைய எமக்கு உத்வேகம் அளிக்கின்றன.” என்றார்.
வலுசக்தி செயல்திறனை மேம்படுத்துதல், வளங்களைப் பொறுப்புடன் பயன்படுத்துதல், கழிவுகளைக் குறைத்தல், நீரைப் பாதுகாத்தல், உயிர்ப் பல்வகைமையைப் பாதுகாத்தல் ஆகியவற்றின் மூலம் தனது சூழல் மாசுபாடுகளைக் குறைக்க Alumex நிறுவனம் செயற்பட்டு வருகிறது. இது உற்பத்தி நடவடிக்கையில், மூலவளத்தை மிகவும் திறன் கொண்டதாக மாற்றுவதற்கும் சூழலில் அதன் தாக்கத்தைக் குறைப்பதற்கும், அதன் மூலம் வட்டப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு மேலும் பங்களிப்பதற்குமான ஒரு பரந்த அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
Alumex PLC பற்றி
Hayleys PLC நிறுவனத்தின் துணை நிறுவனமான Alumex PLC, உயர்தர அலுமினிய தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் இலங்கையின் முன்னணி நிறுவனமாகும். கட்டுமானம், கட்டடக்கலை மற்றும் கைத்தொழில் துறைகளுக்கான புத்தாக்கமான தீர்வுகளில் நிபுணத்துவம் பெற்றுள்ள Alumex நிறுவனம், ஜன்னல்கள், கதவுகள், திரைச் சீலை உபகரணங்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட அலுமினிய கட்டமைப்புகளை வழங்குகின்றது. இந்நிறுவனம் மூன்று உற்பத்தி நிலையங்களை கொண்டுள்ளதுடன், மூன்று அலுமினிய உற்பத்தி நிலையங்கள், ஒரு அனோட்டாக்கல் நிலையம், 3 துகள் கவசமிடல் (powder coating) நிலையங்கள் (தெற்காசியாவின் முதலாவது செங்குத்துத் தொடர் உட்பட) ஒரு மேம்பட்ட அலுமினிய மீள்சுழற்சி தொழிற்சாலை ஆகியவற்றையும் கொண்டுள்ளது. அலுமெக்ஸ் நிறுவனமானது அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, இத்தாலி, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகின்றது. அத்துடன், அலுமினியத்தை பொறுப்புடன் உற்பத்தி செய்யும் வகையில், மூலப்பொருட்களை பெறுதல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் ஆகியவற்றில் தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தி, ‘Aluminium Stewardship Initiative’ (ASI) செயல்திறன் தரச் சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதலாவது நிறுவனமாக அது திகழ்கின்றது.
Hayleys PLC பற்றி
இலங்கை பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமான Hayleys PLC நிறுவனம், கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் பன்முகப் பிரிவுகளைக் கொண்ட குழுமம் ஆகும். இது 17 தொழில்துறைப் பிரிவுகளில் வணிகங்களையும் 20 இற்கும் மேற்பட்ட நாடுகளில் செயற்பாடுகளையும் கொண்டுள்ளது. இக்குழுமம் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் சுமார் 5% ஐக் கொண்டுள்ளதுடன், வீடுகள் மற்றும் தொழில்துறை சார்ந்த இறப்பர் கையுறைகளுக்கான உலகளாவிய தேவையில் சுமார் 5% மற்றும் தேங்காய் சிரட்டை அடிப்படையிலான செயற்பாட்டு காபனில் (activated carbon) 16% உலகளாவிய சந்தைப் பங்கைப் பிடித்துள்ள முன்னணி உலகளாவிய விநியோகஸ்தராக விளங்குவதன் மூலம் பல்வேறு துறைகளில் முன்னணியில் திழ்கின்றது. துணி, அலுமினிய தயாரிப்புகள், பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் மரக்கறிகள், கலப்பின மலர் விதைகள் மற்றும் இழைய வளர்ப்பு தாவரங்கள் ஆகியவற்றின் இலங்கையின் மிகப்பாரிய உற்பத்தியாளராகவும் ஏற்றுமதியாளராகவும் Hayleys விளங்குகின்றது. 38,000 இற்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டிருப்பதோடு, தனது மதிப்புச் சங்கிலிகள் மூலமும் 27,000 இற்கும் மேற்பட்டோருக்கு மறைமுக வாழ்வாதாரங்களுக்கான ஆதரவை வழங்குவதன் மூலமும், இலங்கையின் மிகப்பெரிய தனியார் துறை வேலை வழங்குநர்களில் ஒருவராக Hayleys தொடர்ச்சியாக திகழ்ந்து வருகிறது.

You must be logged in to post a comment.