Local

ஐ.நாவிலும் ‘செல்பி’!

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றி முடித்த பின்னர், அவருடன் ‘செல்பி’ எடுப்பதில் இலங்கைத் தூதுக்குழுவினர் ஆர்வம் காட்டினர்.

அமைச்சர் மனோ கணேசன், வடிவேல் சுரேஸ் எம்.பி. ஆகியோர் ஜனாதிபதியுடன் ‘செல்வி’ எடுத்து அப்படத்தை முகநூலில் பதிவிட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 73ஆவது பொதுச் சபை கூட்டத் தொடரின் பிரதான அமர்வு இலங்கை நேரப்படி நேற்று பிற்பகல் நியூயோர்க் நகரிலுள்ள ஐ நா தலைமையகத்தில் ஆரம்பமானது.

‘ஐக்கிய நாடுகள் சபையை சகல மக்களுக்கும் அணுகச் செய்தல், நீதியும் அமைதியும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகத்திற்கான உலகளாவிய தலைமைத்துவத்தின் ஒன்றிணைந்த பொறுப்பு’ எனும் தொனிப்பொருளில் இந்த அமர்வு இடம்பெறுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை நேரப்படி இன்று காலை 26 அதிகாலை 1.30 மணியளவில் மாநாட்டின் தனது விசேட உரையை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading