Local

ஒன்றுபட்டு வென்றெடுப்போம்! தேர்தலுக்கு நாம் தயார்!! – திடமாகக் கூறுகின்றார் ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்ள எந்த நேரத்திலும் தயார் நிலையிலுள்ளது. இருந்த போதிலும் ஜனாதிபதியின் இவ்வாறான செயற்பாடு சட்டத்தையும், ஜனநாயகத்தையும் மீறியுள்ளது. என முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

உம்ரா கடமையை நிறைவேற்றிவிட்டு தனது கட்சி உறுப்பினர்களோடு நாடு திரும்பிய நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சற்று முன்னர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு திடமாக கூறினார்.

மேலும், அவர் கருத்துரைக்கையில்,

ஜனாதிபதி சட்டத்தை மீறியும், ஜனநாயத்தை துஸ்பிரயோகப்படுத்தியும் எடுத்த இந்த முடிவு கண்டித்தக்கது. இருந்த போதிலும் தேர்தல் என்று வந்தால் அதை நாங்கள் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்.

அத்துடன், இவ்வாறான நிகழ்வு நாட்டின் இறைமையை முற்றிலும் பாதிக்கும் என்தால் இனி வரும் காலங்களிலும் இது போன்ற நிகழ்வுகள் நிகழாமலிருப்பதற்காக நாங்கள் தட்டிக்கேட்கவுள்ளோம். இருந்த போதிலும் நாங்கள் ஒன்றுபட்டு வெற்றியை சுவீகரிப்போம் என திடமாகக் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading