Local

கதிர்காமர் கொலை: புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது! – தகவலுக்காகக் காத்திருக்கின்றது இலங்கை

இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலையுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டவர் தொடர்பான தகவல்களுக்காக, காத்திருப்பதாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

லக்ஸ்மன் கதிர்காமர் கொலை மற்றும் டக்ளஸ் தேவானந்தா கொலை முயற்சி ஆகியவற்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில், தென்மேற்கு ஜேர்மனியில் கடந்த புதன்கிழமை 39 வயதுடைய நவநீதன் என்ற சந்தேக நபரைக் கைது செய்திருப்பதாக ஜேர்மனி பொலிஸ் தெரிவித்திருந்தது.

Sri lanka flag with Germany flag, 3D rendering

எனினும், இது தொடர்பாக, ஜேர்மனியின் உள்துறை அமைச்சின் தகவல்களுக்காக காத்திருப்பதாக, பெர்லினில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

ஜேர்மனி கோரிக்கை விடுத்தால், எத்தகைய விசாரணைக்கும் ஒத்துழைக்கவும், உதவும், இலங்கை தயாராக இருப்பதாக, ஜேர்மனிக்கான இலங்கையின் தூதுவர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இதுதொடர்பாக கருத்து எதையும் வெளியிட கொழும்பில் உள்ள ஜேர்மனி தூதரகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading