Local

‘சபரி மலைக்கு இளம் பெண்களை அனுமதிக்காதே’! 7 ஆம் திகதி கொழும்பில் போராட்டம்!

சபரி மலைக்கு இளம் பெண்கள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் கேரள அரசு சட்டம் இயற்றவேண்டும் எனக்கோரி எதிர்வரும் 7 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெறவுள்ளது.

கோட்டை புகையிரத ரயில் நிலையத்துக்கு முன்பாக முற்பகல் 9 மணிக்கு இடம்பெறவுள்ள இப்போராட்டத்தை அகில இலங்கை சபரிமலை குருசுவாமிகள் ஒன்றியம் ஏற்பாடுசெய்துள்ளது.


சபரி மலையின் புனிதம் காக்க அனைவரையும் அணிதிரளுமாறு மேற்படி ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

அத்துடன், வயது வித்தியாசமின்றி பெண்கள் சபரிமலை செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு தடைகோரி, கேரள அரசு மறுசீரமைப்பு மனுதாக்கல் செய்யவேண்டும் எனவும் இதன்போது கோரப்படவுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading