Local

சபைக்குள் கூரிய ஆயுதங்கள் – விசாரணைகள் ஆரம்பம்!

சபைக்குள் கூரிய ஆயுதங்களை  எம்.பிக்கள் கொண்டு சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாராளுமன்றத்தில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்களின் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பாதுகாப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று (15) இடம்பெற்ற மோதலின் போது இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் வசம் கூரிய ஆயுதங்கள் காணப்பட்டதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை இன்று முதல் பலப்படுத்தவுள்ளதாகவும் பாராளுமன்ற பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading