Local

சபைக்குள் வன்முறை -சபாநாயகரே பொறுப்பேற்கவேண்டும் – மஹிந்த அணி அறிவிப்பு

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக முறையாக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று, ஆளும்தரப்பு உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“நம்பிக்கையில்லா பிரேரணை சரியாக முறையில் முன்வைக்கப்பட்டு, அதனை வாக்கெடுப்புக்கு விடுவதை சபாநாயகர் உறுதி செய்ய வேண்டும்.

சரியான முறையில் நடத்தப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்தால், அடுத்த கட்டம் குறித்து நடவடிக்கை எடுப்பார்.

அரசியலமைப்புக்கு முரணான நம்பிக்கையில்லா பிரேரணைகளை  எதிர்கொள்ள அரசாங்கம் தயாரில்லை

நாடாளுமன்றத்தில் கடந்த சில நாட்களில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை குறை கூறக் கூடாது. அதற்கு சபாநாயகர் தான் பொறுப்பு அவர் மீதே குற்றம்சாட்ட வேண்டும்.

இது போன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோதிக் கொண்ட நிகழ்வு ஜப்பானிய நாடாளுமன்றத்திலும் கூட நடந்திருக்கிறது.

சபாநாயகருக்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தும் பரப்புரையை அரசாங்கம் மேற்கொள்ளும்.

சபாநாயகர் வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றியிருந்தால் விரும்பததகாத சம்பவங்கள் நடந்திருக்காது..” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading