Local

சபையில் இன்று பெயர் கூவி வாக்கெடுப்பு! – ஐ.ம.சு.மு., ஐ.தே.மு., கூட்டமைப்பு, ஜே.வி.பி. தனித்தனியாக முக்கிய பேச்சு

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க உறுப்பினர்களின் பெயர்களை அழைத்து வாக்கெடுப்பை நடத்துங்கள் என்று சபாநாயகர், கட்சித் தலைவர்கள் ஆகியோருடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த நிலையில், இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சபை கூடுகின்ற போது மேற்படி வாக்கெடுப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழு இன்று காலை 9 மணிக்கு அவசரமாகக் கூடுகின்றது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டமும், ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டமும், ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டமும் இன்று காலை 10 மணிக்கு தனித்தனியாக நடைபெறவுள்ளது.

இன்று முற்பகல் 11 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading