World

சிங்கங்கள் துரத்தியதால் நீரில் மூழ்கி 400 எருமைகள் உயிரிழப்பு

தென் ஆப்பிரிக்காவின் போட்ஸவானா மற்றும் நமிபியா நாடுகளுக்கு இடையில் உள்ள நதி ஒன்றில் நூற்றுக்கணக்கான எருமைகள் நீரில் மூழ்கின.

இதுகுறித்த முதல்கட்ட விசாரணையில், சிங்கங்களால் துரத்தப்பட்டபோது ஓடியதில் இவை ஆற்றில் மூழ்கியதாக போட்ஸ்வானா அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஆற்றின் மறுபக்கத்தில் தண்ணீர் அதிகமாக இருந்ததினால் எருமைகள் பதறிபோய் நெரிசலில் சிக்கிக் கொண்டிருக்கலாம் என அப்பகுதியில் தங்கும் விடுதி வைத்திருக்கும் உரிமையாளர் தெரிவித்தார்.

இதற்கு முன் நூற்றுக்கணக்கான எருமைகள் நீரில் மூழ்கியதாக கேள்விப்பட்டதில்லை என்றும் அவர் கூறினார்.

சுமார் 400 எருமைகள் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பகுதியில் வாழும் மக்கள் இறந்த எருமைகளை வீட்டிற்கு சமைக்க எடுத்துச் சென்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading