Local

சூரிய உதயத்தை சிகிரிய மலைக்குன்றிலிருந்து பார்க்கும் வாய்ப்பு!

சிகிரியா மலைக்குன்றின் உச்சியிலிருந்து சூரிய உதயத்தைப் பார்க்கும் வாய்ப்பை சுற்றுலாப் பயணிகள் மற்றும் இலங்கையர் பெற்றுள்ளனர்.

உலக சுற்றுலா தினம் நாளைமறுதினம் (27) அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்நிலையில், நாளைமறுதினம் அதிகாலை 5 மணி முதல் சிகிரியா மலைக் குன்றைப் பார்வையிட முடியும் என மத்திய கலாசார நிலையம் அறிவித்துள்ளது.

சிகிரிய மலைக்குன்றின் மேலேறி சூரிய உதயத்தைப் பார்வையிட வேண்டும் என்பதற்காகவே குறித்த இந்த ஏற்பாடு அதே நாளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் காலை 8.30 மணிக்குப் பின்னரே சிகிரியா குன்றில் சுற்றுலா செல்பவர்கள் ஏற முடியும். இவ்வாறான நிலையில் குறித்த சந்தர்ப்பம் மிகவும் அரியது என்றே கூறவேண்டும்.

மேலும், உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சிகிரியாவை அண்மித்த பகுதிகளில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading