Local

ஜனநாயகம் குறித்து பேச ரணிலுக்கு அருகதை இல்லை! இரண்டாவது நாளாகவும் மைத்திரி விளாசல்!!

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை கடுமையாக விமர்சித்து நேற்று  உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்றைய தினமும் அவரை விளாசித்தள்ளியுள்ளார்.

” கட்சிக்குள்ளேயே ஜனநாயகத்தை நிலைநாட்டமுடியாத அவர், நாட்டில் எவ்வாறு ஜனநாயகத்தை நிலைநாட்டுவார். அதற்கான இயலுமை அவரிடம் இல்லை” என்று ஜனாதிபதி சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற  கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

” நாட்டின் சட்டம் மற்றும் ஜனநாயகம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் ரணில் விக்ரமசிங்க, முதலில் தமது கட்சிக்குள் ஜனநாயக ரீதியில் செயற்பட வேண்டும். பின்வரிசை எம்.பிக்களுக்கு அவர் உரிய வாய்ப்பு வழங்குவதில்லை” என்றும் மைத்திரி விமர்சித்தார்.

அதேவேளை, நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் மக்களுக்கான சேவைகளை எவ்வித இடையூறுமின்றி முன்னெடுப்பதற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.நிதியாண்டிற்காக ஒதுக்கியுள்ள அனைத்து நிதியையும் உரிய முறையில் செலவிட்டு, மக்களின் தேவைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading