LocalNorth

மைத்திரியே நீயொரு பச்சைத்துரோகி! – ஜனாதிபதிக்கு எதிராக மன்னாரில் போராட்டம்

ஜானாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மைக்காலத்தில் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாகப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் நேற்று இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டோர் மீண்டும் குடும்ப ஆட்சி வேண்டாம், ரணிலை ஜனாதிபதி ஆக்குவோம், சஜித்தை பிரதமராக்குவோம், மைத்திரியே நீயொரு பச்சைத்துரோகி, மைத்திரியே உன் அரசியல் அதிரடி எல்லாம் இராத்திரியே, ஜனநாயக விரோத செயற்பாடுகளை உடனே நிறுத்து எனப் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பல்வேறு பததைகளை ஏந்தியிருந்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading