Local

தமிழர் தாயகமெங்கும் இன்று தியாகி திலீபன் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழர் தாயகமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து நல்லூரில் திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இன்று நினைவேந்தல் நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேவேளை, தமிழர் தாயகத்தின் பல பகுதிகளிலும் புலம்பெயர் தேசங்களிலும் இன்று திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் எழுச்சிபூர்வமாக இடம்பெறவுள்ளன என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading