EastLead NewsLocal

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக இன்று கிழக்கில் மாபெரும் போராட்டம்!

சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்று முற்பகல் 10.00 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் காந்தி பூங்கா முன்பாக நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விடுதலையை வலிறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில், அதற்கு ஆதரவாக வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading