Up Country

தீபாவளியைக் கொண்டாடச்சென்ற இளைஞர்களுக்கு மரணபீதியை ஏற்படுத்திய விபத்து!

அட்டன், மல்லியப்பு பகுதியில் கார் ஒன்று இன்று ( 05) அதிகாலை மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக இளைஞர்கள் – கொழும்பிலிருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி செல்லும்வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.


குறித்த காரில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளதாகவும், எனினும் அவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி காரில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
க.கிசாந்தன்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading