Local

நாடாளுமன்றிலும் மஹிந்த ‘அலை’ – சபை முதல்வர் பதவியை ஏற்றார் தினேஸ்!

நாடாளுமன்றத்தில் புதிய சபைமுதல்வராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.


நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சபைமுதல்வர் காரியாலயத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த உட்பட மேலும் சிலர் கலந்துகொண்டனர்.

சபைமுதல்வர் பதவியை லக்ஸ்மன் கிரியல்லவே வகித்தார். மஹிந்தவுக்கு எதிராக பிரேரணை கொண்டுவந்ததால், அவருக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக உடனடியாக பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு அடுத்தப்படியாக கூடுதல் அதிகாரம்கொண்ட பதவியாக சபைமுதல்வர் பதவி காணப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading