Local

நாளை முதல் அடைமழை!

இலங்கையின் பலபாகங்களிலும் நாளை முதல் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


வளிமண்டலத்தில் காணப்படும் தாழ்மட்ட இடையூறு காரணமாக மழையுடனான வானிலை தொடரும் என்றும், நாளை முதல் அது வலுவடையும் என்றும் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வடக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாலைநேரங்களில் இடியுடன் கூடிய கடும் மழைபெய்யலாம் எனவும் எதிர்கூறபப்பட்டுள்ளது. எனவே, விழிப்பாக இருக்குமாறு மக்களிடம் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேவேளை, கரையோரப்பகுதிகளில் கடல்கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் மீனவர்களும் அவதானமாக செயற்படவேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading