World

பலஸ்தீனத்தில் இஸ்ரேல் அடாவடி! மூவர் உயிரிழப்பு!!

காஸா எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதாக பலஸ்தீன மருத்துவ அதிகாாிகள் தொிவித்துள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 248இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, உயிரிழந்தவர்களுள் 11 வயது சிறுவனொருவனும் கொல்லப்பட்டிருப்பதாக தொிவிக்கப்படுகிறது.

சுமார் 12 பலஸ்தீனியர்களின் எல்லை மீறல்களை தடுக்கும் வகையிலும் அவர்களின் தாக்குதல்களை எதர்கொள்ளும் வகையிலும் படையினரின் பலத்தை பிரயோகிக்க வேண்டிய தேவை தமக்கு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தொிவித்துள்ளது.

கடந்த மார்ச் 30ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுவரும் பலஸ்தீனியர்களின்  ஆர்பாட்டத்தின் போதான தாக்குதல்களில்   177 பலஸ்தீனியர்கள் உயிரிழந்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading