Local

புதிய அமைச்சரவையில் விஜயதாசவுக்கு கதவடைப்பு!

ஐக்கிய தேசிய முன்னணி அமைச்சரவையில், விஜயதாச ராஜபக்ச, திலங்க சுமதிபால, தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு கதவடைப்பு செய்யப்பட்டுள்ளது.

” ஜனாதிபதி அழுத்தங்களை கொடுத்தாலும் எந்த காரணம் கொண்டும் இவர்களை இணைத்துக்கொள்ளக் கூடாது”  என ஐ.தே.க. உறுப்பினர்கள், ரணிலிடம் தெரிவித்துள்ளனர்.

கடந்தகாலங்களில் ஐக்கிய தேசியக்கட்சியையும், அதன் தலைமைத்துவத்தையும் இவர்கள் கடுமையாக விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதேவேளை, அரசமைப்பின் பிரகாரம், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களை தவிர வேறு அமைச்சுக்களை வழங்குவதில்லை எனவும், ஜனாதிபதி ஏற்கனவே வர்த்தமானியை வெளியிட்டு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள நிறுவனங்களை அவரிடம் இருந்து பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

19வது அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொள்ளலாம். ஏனைய அமைச்சுக்கள் அமைச்சரவைக்கு வழங்கப்பட வேண்டும்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading