Local

புதிய அமைச்சரவை நாளை பதவியேற்பு! – நிதி அமைச்சை ரவிக்கு வழங்க எதிர்ப்பு

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் புதிய அமைச்சரவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நாளை பதவியேற்கும்  என தெரியவருகின்றது.

இதன்படி அமைச்சரவைப் பட்டியல் ஜனாதிபதிக்கு இன்றுமாலை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக  நிதி அமைச்சர் உள்ளிட்ட 15 தொடக்கம் 20 வரையான அமைச்சரகளே பதவியேற்கக்கூடும்.

” சட்டம் ஒழுங்கு அமைச்சர் தொடர்பாக இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.எஞ்சிய அமைச்சர்கள் அடுத்த சில நாட்களில் பதவியேற்பார்கள்.” என்று ஆளுங்கட்சி எம்.பியொருவர் தெரிவித்தார்.

அதேவேளை, நிதியமைச்சுப் பதவியை ரவிகருணாநாயக்கவுக்கு வழங்கப்படக்கூடாது என ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுவருகின்றது. ஐ.தே.கவின் உறுப்பினர்கள் சிலரும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading