EastLead News

பொத்துவில் விபத்தில் மூவர் ஸ்தலத்திலேயே பரிதாபப் பலி!

அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்ற ஓட்டோ – கார் விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கி வேகமாகச் சென்ற கார், பொத்துவில் குஞ்சான் ஓடையில் வீதியோரத்தில் தரித்து நின்ற ஓட்டோவுடன் மோதியதால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 2 பெண்களும், 7 வயது சிறுவனும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மேலும் ஒரு 11வயது சிறுவன் ஒருவன் படுகாயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்து தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Update:

நேற்று இரவு பொத்துவிலில் இடம்பெற்ற விபத்தில் அப்துல் காதர் பாத்திமா அஸ்மியா மற்றும் அவருடைய மூன்று பிள்ளைகள் வீதியில் தரித்து நின்ற வேளை வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதிலேயே குறித்த சம்பவம் நிகழந்துள்ளது.

முச்சக்கர வண்டியில் தனது இல்லம் செல்லும் வழியில் அவர்கள் பயணித்த வண்டியின் எரிபொருள் போதாமை காரணமாக குஞ்சான் ஓடைப் பகுதி வீதிக்கு அருகாமையில் குறித்த குடும்பத்தினர் இறங்கி வீதியோத்தில் நின்று கொண்டிருந்த வேளை பொத்துவிலை நோக்கி வேகமாக வருகைதந்த கார் வீதியின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த குடும்பத்தினர் மீது மோதியதால் தாயும் இரண்டு பிள்ளையும் உயிரிழந்ததுடன் மேலும் ஒரு 11வயது மகன் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஆனமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த விசாரணைகளை பொலிஸார் தொடர்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading