Local

மக்களே அவதானம்! – வடக்கு, கிழக்கில் இன்று சுட்டெறிக்கும் வெயில்

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் இன்றும் அதிக வெப்பத்துடன்கூடிய காலநிலை தொடருமென வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும், வடக்கில் , முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் வடமத்திய மாகாணத்தில் பொலனறுவை மாவட்டத்திலும் அதிக வெப்பத்துடன் கூடிய வானிலை நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதனால் அவதானமாகச் செயற்படுமாறு வளிமண்டளவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

உஷ்ணமான காலநிலை நிலவும் பகுதிகளில் உள்ளோர் அதிகம் நீர் அருந்துமாறும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நிழலான பகுதிகளில் நேரத்தை செலவிடுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading