Up Country

மண்சரிவு அபாயம் – 43 குடும்பங்கள் இடம்பெயர்வு

ஹல்துமுள்ளை பகுதியிலுள்ள பத்கொடை பெருந்தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 43 குடும்பவங்களைச் சேர்ந்த 215 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.


இடம்பெயர்ந்தவர்கள், பத்கொடை ஸ்ரீ விபுலானந்தா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான அடிப்படை வசதிகளையும், உணவுகளையும் வழங்கும் நடவடிக்கையை ஹல்துமுள்ளை பிரதேச செயலகம் பொறுப்பேற்றுள்ளது.


பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையமும், ஹல்துமுள்ளை பிரதேச செயலகமும் இணைந்து, அனர்த்த நிலைமை குறித்து ஆராய்ந்துவருகின்றன.
பதுளை நிருபர்

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading