Local

ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டாராம் மைத்திரி!

எந்தவொரு காரணத்திற்காகவும் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார்.

ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பை அடுத்து, லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளதாக லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading