ராஜபக்ச பதவியேற்றிருப்பது இந்திய அரசுக்கு எதிரானது – பழ.நெடுமாறன்
இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வந்திருப்பது இந்திய அரசுக்கு எதிரானது என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இ
லங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கை பிரச்சனையில் சீனா மீண்டும் வெற்றி பெற்றுவிட்டதாகவும் இந்தியாவின் அணுகுமுறை தோல்வியை சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
