LocalNorth

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை குறித்து கருத்துச் சொல்ல செங்கோட்டையன் மறுப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்களின் விடுதலை தொடர்பில் எதுவும் கூறமுடியாது என்று யாழ்.வந்த தமிழக அரசின் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கைதான 7 பேர் தொடர்பில் தமிழக அரசு முடிவுகளை எடுக்கமுடியும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அது தொடர்பாகத் தமிழக அரசின் நடவடிக்கை எந்த வகையில் உள்ளது என்று நேற்று யாழ்ப்பாணம் வந்த தமிழ அமைச்சர் செங்கோட்டையனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அவர்,

“அவர்களின் விடுதலை தொடர்பில் என்னால் கருத்துக் கூற முடியாது. அது தொடர்பில் கருத்துக்களை கூறுவதற்கு அமைச்சரவையினால் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மட்டுமே இது தொடர்பில் கருத்துக்களையோ, அல்லது கேள்விகளுக்கான பதில்களையோ கூறுவார்” -என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading