Local

ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சி! – இரட்டைச் சதமடிக்குமா டொலர்?

தொடர்ச்சியாக சரிவைச் சந்தித்து வந்த அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பொறுமதி வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

மத்திய வங்கியினால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி, ரூபா 167.4125 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி, ரூபா 163.8714 ஆகவும் மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டு வருவதால், இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, இலங்கை ரூபாவுக்கு எதிரான டொலரின் பெறுமதி 200 ஆக உயரும் அபாயமிருப்பதாக பொது எதிரணி குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading