Local

வாழ்க்கைச்சுமை அதிகரிப்பால் மக்கள் திண்டாட்டம்! மரக்கறி விலையும் உயரும் அறிகுறி!!

ஒக்டோபர் மாதத்தின் நடுப்பகுதி தொடக்கம் மரக்கறி வகைகளின் விலை மீண்டும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது , அதிகளவில் மரக்கறி வகைகள் சந்தைக்கு கிடைப்பதால் , எதிர்வரும் மாதத்தில் மரக்கறி தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.

எனவே தான் மரக்கறி வகைகளின் விலை மீண்டும் அதிகரிக்கும் எனவும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் 195 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

கடந்த வாரம் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டது.

1628 ரூபாவாகக் காணப்பட்ட 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1823 ரூபாவாக இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading