Local

மின்சாரத்தைப் பாய்ச்சி மகனைக் கொலைசெய்த தந்தை! – மாத்தறையில் கொடூரம்

மின்சாரம் பாய்ச்சி தனது மகனைக் கொலைசெய்துள்ளார் தந்தை. இந்தக் கொடூர சம்பவம் மாத்தறை – வல்கம பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

மகனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே மகனைப் பழிதீர்க்கும் வகையில் தந்தை இவ்வாறு செய்துள்ளார் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

29 வயதுடைய இளைஞரே உயிரிழந்தவராவார். தந்தையைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சினையால் மகனும் அவரது தாயும் தனியாகவே வசித்து வந்துள்ளனர். இந்நிலையிலேயே தனியாக வசித்து வந்த தந்தையின் வீட்டுக்கு மகன் நேற்று சென்றுள்ளார். இதன்போது மேற்படி கொடூரம் நடந்தேறியுள்ளது.

தனியாக வசித்ததால் சுயபாதுகாப்பு கருதியே தான் மின்வேலியை போட்டு வைத்தார் என தந்தை கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading