Local

கோர விபத்தில் இருவர் மரணம்! – மூவர் உயிருக்குப் போராட்டம்

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் நிட்டம்புவ, கலல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மணல் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான ஐவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அதில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

பஸ்யால பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரும் 73 வயதுடைய ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

ஏனைய மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading