Cinema

அஜித் நடிக்கும் விடாமுயற்சியில் வில்லனாக அர்ஜுன்?

அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் அவருக்கு வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மற்றொரு வில்லன் கதாபாத்திரத்துக்கு மற்ற மொழி நடிகரை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் விக்னேஷ் சிவன், அந்தப் படத்திலிருந்து விலக்கப்பட்டார். இதையடுத்து, அஜித்தின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்தது. ‘விடாமுயற்சி’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் நடிகர், நடிகைகள் குறித்து அறிவிப்பு எதையும் படக்குழு வெளியிடவில்லை.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக கங்கனா ரணாவத், கத்ரினா கைப், கரீனா கபூர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக முதலில் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க நடிகர் அர்ஜுன் தாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றொரு வில்லன் கதாபாத்திரத்திற்கு வேறொரு திரையுலகைச் சேர்ந்த நடிகரை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனினும், விரைவில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லொகேஷன் மற்றும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இம்மாத இரண்டாம் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading