Gossip

அடுத்தவரின் மனைவியுடன் முதலிரவு காலையில் காத்திருந்த பேரதிர்ச்சி!

மனைவியை வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு, அவரிடமிருந்து நகை மற்றும் பணத்தினை கொள்ளையடித்த கூட்டத்தை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் உள்ள குனாடி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் சோனு மற்றும் கோமல்.

இவர்கள் இருவருக்கும் சீக்கிரமாக பணக்காரராக வேண்டும் என்று ஆசை ஏற்பட்டதையடுத்து, அப்பகுதியிலிருக்கும் சுமன் என்ற கல்யாண தரகரை அணுகியதோடு, மூவரும் சேர்ந்து திட்டம் ஒன்றினையும் போட்டுள்ளனர்.

அதன்படி குறித்த தரகர், ரவி என்ற மணமகனுக்கு சோனுவின் மனைவியை கல்யாணம் ஆகாதவர் என்று கூறியதோடு, சோனுவை பெண்ணின் சகோதரர் என்றும் கூறி திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் முதலிரவு முடிந்து, மறுநாள் காலையில் எழுந்து பார்த்த ரவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் குறித்த பெண்ணும், அவரது கணவரும், கல்யாண புரோக்கர் மூவரும் ரவி கொடுத்த இரண்டு லட்சும் ரூபாய் மற்றும் நகையினை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகியுள்ளனர்.

பின்பு ஏமாந்த ரவி பொலிசில் தன்னுடைய புது மனைவி நகையோடு காணாமல் போய்விட்டார் என்று புகார் அளித்துள்ளார்.

பொலிசாரின் விசாரணையின் போது தான், இவர்கள் மூன்று பேரும் கொள்ளையடிக்க போட்ட மாஸ்டர் பிளான் தான் இந்த திருமணம் என்று தெரியவந்ததையடுத்து, மூவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading