Local

அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்கும்!

அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினிபெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

அடுத்த சில வாரங்களில் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் கொரோனா வைரசினால் பாதிக்கப்படுப வர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

பி117 கொரோனா வைரஸிலிருந்தே மூன்றாவது அலை ஆரம்பமானது என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் இதுவேகமாக பரவக்கூடியது இதனால் பல பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரசினால் ஒருவர் பாதிக்கப்பட்டு இரண்டு மூன்று வாரங்களின் பின்னரே உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதிகமான உயிரிழப்புகள் இரண்டு மூன்று வாரங்களின் பின்னரே இடம்பெற்றுள்ளன எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் எந்தச் சூழ்நிலையிலும் எந்த தருணத்திலும் மாற்றமடையலாம் எனத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் பி117 கொரோனா வைரசிற்கு எதிராக மருந்துகள் பயன் அளிக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

வைரஸை தற்போது கட்டுப்படுத்தத் தவறினால் எதிர்காலத்தில் மேலும் பல வைரஸ்கள் உருவாகலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்..

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading