Local

அடுத்த தொற்றுநோய் கொரோனாவை விட மிக ஆபத்தானதாக இருக்கக்கூடும்!

எதிர்காலத்தில் தோன்றும் தொற்றுநோய்கள் கொரோனாவை விட மிக ஆபத்தானதாக இருக்கக்கூடும் என ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை உருவாக்கியவர்களில் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், இன்று வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில், எதிர்காலத்தில் தோன்றும் தொற்றுநோயின் தன்மை குறித்து ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை உருவாக்கியவர்களில் ஒருவரான Sarah Gilbert எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Sarah Gilbert கூறுகையில், ஒரு வைரஸ் நமது உயிர் மற்றும் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது இதுவே கடைசியாக இருக்காது.

உண்மை என்னவென்றால், அடுத்து தோன்றும் தொற்றுநோய் கொரோனவை விட மிக ஆபத்தானதாக இருக்கும்.

அது மிகவும் தீவிரமாக தொற்றக்கூடியதாக அல்லது உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக அல்லது இரண்டையுமே கொண்டதாக இருக்கக்கூடும்.

அனைவரும் கடந்த வந்த சூழ்நிலை மீண்டும் திரும்புவதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது. நாம் மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்புகளை சந்தித்துள்ளோம்.

தொற்றுநோய்க்கு எதிரான நாம் அடைந்த முன்னேற்றங்கள் மற்றும் நாம் பெற்ற அறிவை இழந்து விடக்கூடாது என Sarah Gilbert தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading