Local

அடுத்த மாதம் முதல் தடுப்பூசி அட்டை இல்லாமல் பஸ்களில் ஏற முடியாது!

கொரோனா தடுப்பூசி பெற்ற அட்டை இல்லாமல் பயணிகளை பேருந்துகளில் ஏற்றுவதை நிறுத்துவதற்கு அடுத்த மாதம் முதல் மேல் மாகாணத்தில் புதிய நடைமுறை கொண்டுவரப்படவுள்ளது.

இதில் மேல் மாகாணத்தில் சுமார் 6,200 தனியார் பேருந்துகள் இயங்குகின்றன, அந்த பேருந்துகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மாகாண பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் கொரோனா ஊசி அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும், மேலும் பேருந்தில் ஏறும் போது அட்டையை சரிபார்ப்பதற்கு நடத்துனர் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading