Local

அடுத்த வாரம் இலங்கைக்கு கிடைக்கவுள்ள தலைமை பொறுப்பு

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் தலைமை பொறுப்பை எதிர்வரும் 11ஆம் திகதி இலங்கை ஏற்கவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

1997 இல் நிறுவப்பட்ட இந்தியப் பெருங்கடல் ரிம் அசோசியேசன் ஆனது இது இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.

16 அமைச்சர்கள் பங்கேற்பு

தற்போதைய தலைவராக பங்களாதேஷின் வெளியுறவு அமைச்சர் ஏ.கே. அப்துல் மொமன், பதவி வகிக்கும் நிலையில் அடுத்து வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, சபையின் தலைவராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் இலங்கைக்கு கிடைக்கவுள்ள தலைமை பொறுப்பு | Sri Lanka Will Assume The Leadership Indian Ocean

கொழும்பில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 16 அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.

அவர்களில் பங்காளதேச வெளியுறவு அமைச்சர்; ஏ.கே. அப்துல் மொமன், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன், மொரீஸியஸின் வெளியுறவு அமைச்சர் மனீஸ் கோபின், மலேசியாவின் அமைச்சர் டத்தோஸ்ரீ டிராஜா ஜாம்ப்ரி அப்துல் காதிர் மற்றும் தென்னாபிரிக்காவின் அமைச்சர் நலேடி பாண்டோர் உள்ளடங்குகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading