Jobs

ஏழாவது ஆண்டாக உலகளாவிய Gaming Monitor சந்தையில் முதலிடத்தை தக்கவைத்து Samsung சாதனை

 

ஒவ்வொரு மில்லிசெக்கனும் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கும் தற்போதைய Gaming உலகில், Samsung Electronics நிறுவனம் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. செயல்திறன், துல்லியம் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு பெயர் பெற்ற உலகளாவிய சந்தையில், Samsung தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலகளவில் முதற்தர (No.1) Gaming Monitor வர்த்தக நாமமாக தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

சர்வதேச தரவு நிறுவனத்தின் (IDC) சமீபத்திய தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் உலகளாவிய Gaming Monitor வருவாய் சந்தையில் Samsung நிறுவனம் 18.9% பங்குகளைக் கைப்பற்றியுள்ளது. 2019-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் Samsung, நவீன கேமர்களின் தேவைகளை முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப தயாரிப்புகளை வடிவமைக்கும் Samsung இன் தனித்துவமான திறனை வெளிப்படுத்துகிறது.

மேலும், OLED Gaming Monitor பிரிவில் Samsung நிறுவனம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன், 26% சந்தைப் பங்கையும் தன்வசப்படுத்தியுள்ளது. உயர்தர காட்சி அமைப்புகளுக்கான (Visual Fidelity) தேவை அதிகரித்து வருவதையும், வெறும் திரையாக மட்டுமில்லாமல் விளையாட்டிற்குள் நேரடியாக நம்மை அழைத்துச் செல்லும் ஒரு நுழைவாயிலாகத் திரைகளை மாற்றும் Samsung இன் தொழில்நுட்பத் திறனையும் இந்த வெற்றி பிரதிபலிக்கிறது.

இது குறித்து Samsung இன் Visual Display வணிகப் பிரிவின் நிறைவேற்று துணைத் தலைவர் ஹன் லீ கூறுகையில், முன்னணி Gaming Monitor வர்த்தகநாமம் என்ற வகையில், எங்களின் இலக்கு தனித்துவமான கண்டுபிடிப்புகள் மூலம் சந்தையைத் தொடர்ந்து வழிநடத்துவதாகும். கேமிங் ஸ்டுடியோக்களுடனான எங்களின் வலுவான கூட்டாண்மை புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிகாட்டுகிறது. எங்களின் gaming library விரிவுபடுத்துவதன் மூலமும், பல்வேறு தளங்களுக்கான இணக்கத்தன்மையை அதிகரிப்பதன் மூலமும், கேமர்களுக்கு மிகவும் தேவைப்படும் தருணங்களில் சிறந்த செயல்திறனை வழங்கும் திரைகளை நாங்கள் வழங்கி வருகிறோம்.” என்றார்.

T1 அணியின் உலகளாவிய eSports நட்சத்திரம் ‘ஃபேக்கர்’ என்று அழைக்கப்படும் லீ சாங்-ஹியோக் உடனான கூட்டணியும் இந்த கூட்டுப்பங்காண்மைகளில் உள்ளடங்குகிறது. போட்டி நிறைந்த கேமிங் உலகில் இவரது செல்வாக்கு மிக முக்கியமானது. கேமிங் துறையில், மிகச் சிறியதொரு மாற்றமும் கூட மிகப்பெரிய வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக அமையும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக Samsung நிறுவனம் முதலிடத்தில் இருப்பது, நம்மில் பலர் ஏன் Samsung- தேர்ந்தெடுக்கிறோம் என்பதற்கான தெளிவான சான்றாகும். நாம் மிகச்சிறந்த முறையில் விளையாடுவதற்கு உதவும் வகையில், Samsung அடுத்து என்னென்ன புதுமையான கேமிங் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தப் போகிறது என்பதைக் காண நான் மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2026-ஆம் ஆண்டிற்கான Game Developers மாநாட்டில், நிறுவனத்தின் புத்தாக்கத் திறன் முழுமையாக வெளிப்பட்டது. இந்நிறுவனம் Samsung தனது புதிய Odyssey Gaming Monitor வரிசையை அங்கு அறிமுகப்படுத்தியது. இது வெறும் மேம்படுத்தப்பட்ட பதிப்பு மட்டுமல்ல, ஊடாடும் பொழுதுபோக்குத் துறையின் எதிர்காலத்தை நோக்கிய ஒரு மாபெரும் பாய்ச்சலாகும்.

இந்த வரிசையில் முன்னணியில் இருப்பது 27 அங்குல Odyssey 3D – G90XF Monitor ஆகும். அதிநவீன கண்-கண்காணிப்பு தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் இந்த Monitor இல், கண்ணாடி அணியாமலேயே 3D காட்சிகளைக் காண முடியும். இது திரையில் தோன்றும் காட்சிகளுக்கு மிக இயல்பான ஆழத்தைக் கொடுப்பதால், விளையாடுபவர்கள் திரைக்குள்ளே கையை நீட்டி அந்தச் செயல்களைத் தொடுவது போன்ற ஒரு நிஜமான உணர்வைப் பெறுவார்கள். இந்த அனுபவத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் Odyssey 3D Hub அமைந்துள்ளது. இது இந்த ஆண்டிற்குள் தனது இணக்கமான கேம்களின் எண்ணிக்கையை 120-க்கும் மேலாக உயர்த்தவுள்ளது. இதில் விரைவில் வெளியாகவிருக்கும் Hell is Us மற்றும் Cronos: The New Dawn போன்ற பிரபல கேம்களும் அடங்கும்.

காட்சித் தரத்தில் துல்லியத்தை விரும்பும் கேமர்களுக்காக, 32 அங்குல Odyssey OLED G8 – G80SH Monitor அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 240Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 4K QD-OLED தெளிவுத்திறனை வழங்குகிறது. Samsung இன் OLED Safeguard+ தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த மொனிட்டர்இ நீண்ட கால ஆயுளுடன் துடிப்பான வண்ணங்களையும் ஆழமான மாறுபாடுகளையும் (contrast) உறுதி செய்கிறது.

தொழில்நுட்பத்தின் எல்லைகளை மேலும் ஒருபடி மேலே கொண்டு செல்லும் வகையில், உலகின் முதலாவது 6K கேமிங் மொனிட்டரான 32 அங்குல Odyssey G8 – G80HS அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 165Hz வரையிலான புதுப்பிப்பு வீதத்துடன் (Native refresh rate) மற்றும் 3K தரத்தில் 330Hz வரை இயங்கக்கூடிய Dual Mode தொழில்நுட்பம் ஆகியவற்றை இது கொண்டுள்ளது. இதன் மூலம், பயனர்கள் சினிமா போன்ற துல்லியமான காட்சித் தெளிவையும், அதே நேரத்தில் அதிவேக கேமிங் அனுபவத்தையும் பெற முடியும். மேலும், இதில் மேம்படுத்தப்பட்ட ‘VESA’ சான்றளிக்கப்பட்ட DisplayPort 2.1 இணைப்பு வசதி உள்ளதால், கேமிங் மற்றும் உள்ளடக்கங்களை ரசிப்பதில் தடையற்ற செயல்திறனை இது உறுதி செய்கிறது.

இதற்கிடையில், வேகத்தின் புதிய பரிமாணத்தை உலகிற்கு அறிமுகப்படுத்துகிறது 27 அங்குல Odyssey G6 – G60H Monitor. உலகின் முதலாவது 1,040Hz கேமிங் மொனிட்டரான இது, அசாத்தியமான துல்லியத்தை எதிர்பார்க்கும் eSports வீரர்கள் மற்றும் கேமிங் பிரியர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலதாமதத்துடன், நொடிப்பொழுதில் துலங்கக்கூடிய பயஅநிடயல அனுபவத்தை இது வழங்குகிறது.

Samsung நிறுவனத்தின் தொடர்ச்சியான இந்த சந்தை ஆதிக்கம் என்பது விற்பனை இலக்குகளைக் கடந்து, கேமிங் அனுபவத்தையே புதிய தளத்திற்கு எடுத்துச் செல்வதில் அடங்கியுள்ளது. Samsung இன் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் கேமிங்கின் காட்சி யதார்த்தம், துல்லியமான வேகம் மற்றும் மெய்நிகர் உலகிற்குள் நம்மை அழைத்துச் செல்லும் ஆழ்ந்த அனுபவம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, ஒரு முழுமையான டிஜிட்டல் அனுபவத்தை உருவாக்கும் முயற்சியாகவே அமைகிறது.

கேமிங் உலகம் அதிவேகமாக உருமாறி வரும் நிலையில், உலகத்தரம் வாய்ந்த இத்தகைய அதிநவீன கண்டுபிடிப்புகளை இலங்கையிலுள்ள கேமர்களிடம் கொண்டு சேர்க்க Samsung Sri Lanka எப்போதும் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், உள்ளூர் கேமர்கள் முன்னெப்போதையும் விட மிகவும் துல்லியமாகவும், வேகமாகவும், தெளிவான காட்சி அனுபவத்துடனும் விளையாடுவதற்கான சிறந்த கருவிகளை வழங்கி, அவர்களின் திறனை Samsung மேம்படுத்துகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading