Local

அடுத்த 5 ஆண்டுகளில் உலகளவில் வழக்கத்தை விட கூடுதலாக 14 இலட்சம் மக்கள் உயிரிழப்பார்கள்

கொரோனா தொற்றால் பரவும் காசநோயின் பாதிப்பு  அடுத்த 5 ஆண்டுகளில் உலகளவில் வழக்கத்தை விட கூடுதலாக 14 இலட்சம் மக்கள் உயிரிழப்பார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் மனித சமுதாயத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது.
இலட்சக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்ததுடன் 212 க்கும் மேற்பட்ட நாடுகளின் பொருளாதாரத்தையும் புரட்டி போட்டுவிட்டது.
கொரோனா தொற்று பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பெரும்பாலான நாட்டு மக்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
மேலும்,காச நோயாளிகள் அதிகம் வாழும் கென்யா, இந்தியா , உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக ஸ்டாப் டி.பி என்னும் உலகளாவிய அமைப்பு கூறுகின்றது.
வேலை காரணமாக வீட்டில் இருந்து வழக்கமாக வெளியே சென்று வரும் நபர்கள் 24 மணி நேரமும் வீட்டிலேயே இருப்பதால், அதே வீட்டில் வசிக்கும் காசநோயாளிகளால் இந்த நோய்த் தொற்றின் பாதிப்புக்கு உள்ளாக நேரிடுகின்றது.
இதனால் காசநோய் பரவும் அபாயமும் அதிகம் உள்ளது என்று இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதனால் அடுத்த 5 ஆண்டுகளில் உலக அளவில் காசநோய்க்கு வழக்கத்தை கூடுதலாக 14 இலட்சம் மக்கள் உயிரிழப்பார்கள் எனவும் அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading