Local

மகள் தாக்கியதில் தாய் மரணம்

விசேட தேவையுள்ள மகள் தாக்கியதில் 5 பிள்ளைகளின் தாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக ஹங்குரங்கெத்தை பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது. 75 வயதான தாய் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன் அவர் விசேட தேவையுள்ள இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார்.
கொல்லப்பட்ட பெண்ணின் இரண்டு மகள்கள் பல உடல்நல குறைப்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் இன்று காலை ஒரு மகள் தாயையும் சகோதரியையும் தாக்கியுள்ளார் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த வீட்டில் இப்படியான தாக்குதல் சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளதுடன் அவை குறித்து பொலிஸில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தாக்குதல் நடத்திய மகளை ஹங்குரங்கெத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். வீட்டில் இருந்த உலக்கையால் இந்த பெண் தாயை தாக்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading