World

அதிகரிக்கும் போர் பதற்றம் – பேச்சுவார்த்தை இல்லை – ஈரான் அறிவிப்பு

அடுத்து, புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்துவது குறித்து அரசாங்கத்திற்கு எந்தத் திட்டமும் இல்லை என ஈரான் தரப்பு அறிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

குறித்த விடயத்தை சற்றுமுன் ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி (Iranian Foreign Ministry spokesman Esmaeil Baghaei) தெரிவித்துள்ளார்.

புதிய சுற்றுப் பேச்சுவார்த்தை

அவர் மேலும் தெரிவிக்கையில், ஏப்ரல் 13 முதல் ஹோர்முஸ் நீரிணையில்  அமெரிக்கக் கடற்படை விதித்த முற்றுகையையும், இரவோடு இரவாக அமெரிக்க இராணுவத்தால் ஈரானிய சரக்குக் கப்பல் கைப்பற்றப்பட்டதையும், இவை போர் நிறுத்தம் மற்றும் சர்வதேசச் சட்டம் ஆகிய இரண்டையும் மீறிய செயல்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Iranian Foreign Ministry spokesman Esmaeil Baghaei

போர் நிறுத்தம் காலாவதியாக 48 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே உள்ள நிலையில், அமெரிக்காவுடனான புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்காக இஸ்லாமாபாத்திற்குப் பேச்சுவார்த்தையாளர்களை அனுப்பும் திட்டம் தங்களுக்கு இல்லை என ஈரான்  அறிவித்துள்ளதால் மத்திய கிழக்கு பிராந்திரத்தில் பதற்ற நிiலை அதிகரித்துள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading